Monday 26 December 2011

கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 01:52.03 பி.ப GMT ]
அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும்.
கணணி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது கைபேசி உலகிலும் கால் வைத்துள்ளது.
முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் கைபேசிகளுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம்.
இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.
மென்பொருளில் உள்ள வசதிகள்:
Antivirus Production- Real time Production, Custom Updates
Web Shield
Call / SMS filter
Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
Firewall
Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது.
இந்த மென்பொருளை Avast for android தளத்தில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணணியில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யும் பொழுது உங்கள் கணணியோடு உங்கள் ஆன்ராய்ட் கைபேசி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Thursday 22 December 2011

Text Animation-ஐ உருவாக்கும் பயனுள்ள இணையம்


Text Animation-ஐ உருவாக்கும் பயனுள்ள இணையம்
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 05:26.58 மு.ப GMT ]
எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளிதாக Animation உருவாக்கலாம்.
இத்தளத்திற்கு சென்றவுடன் Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.
Font type, Font size, Background color, Direction(new), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும்.
நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணணியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.

Tuesday 6 December 2011

புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது கைபேசிக்கு தகவல் தெரிவிப்பதற்கு


புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது கைபேசிக்கு தகவல் தெரிவிப்பதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 06 டிசெம்பர் 2011, 06:19.46 மு.ப GMT ]
தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது. அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்பதை கைத்தொலைபேசியின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப்படுத்துகிறது.
இந்த தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில்http://www.site2sms.com/userregistration.asp உங்களது பெயர், பாலினம், மின்னஞ்சல், தொழில், மாநிலம், கைபேசி எண், கடைசியாக உங்கள் city name ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
பதிவு செய்து முடித்தவுடனே உங்கள் கைபேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .

அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
011-47606762 Or Mail us on support@site2sms.com.
அதன்பின் டாஸ் போர்டுக்கு செல்லுங்கள். Settings Page-க்கு செல்லுங்கள்.
அந்த பக்கத்தில் எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ் வர வேண்டும் என்று கொடுத்து விடுங்கள்.
eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள்.
அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டு வந்து சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP ".
forward a copy of incoming mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை(123456789012@site2sms.com) கொடுக்கவும்.
உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மின்னஞ்சலை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் கைபேசிக்கும் வரும்.

Saturday 3 December 2011

இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு


இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு
[ சனிக்கிழமை, 03 டிசெம்பர் 2011, 08:46.37 மு.ப GMT ]
இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.
கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தி பதிவேற்றலாம்.
ஓடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம். எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும் கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம்.
ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஓன்லைனில் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Thursday 17 November 2011

(Excel கோப்புகளை படங்களாக மாற்றம் செய்வதற்கு


கோப்புகளை படங்களாக மாற்றம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 03:53.18 மு.ப GMT ]
நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட் கோப்புகளான வேர்டு(Word) , எக்சல்(Excel )மற்றும் பவர்பாயிண்ட்(Power Point ) போன்ற கோப்புகளை Jpg படங்களாக மாற்றி கொடுக்க ஒரு தளம் உள்ளது.
நம்மிடம் உள்ள டாக்குமெண்ட் கோப்புகளை சில சமயங்களின் ஓன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது பல பேர் அதை அப்படியே கொப்பி எடுத்து எந்த அனுமதியும் பெறாமல் தங்களின் தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
முக்கியமான கோப்புகளை படங்களாக இனி எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் திரையில் View என்று இருப்பதை சொடுக்கி, நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை படங்களாக பார்க்கலாம். இந்த படத்தின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணணியில் JPG படங்களாக சேமிக்கலாம்.
வேர்டு, எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை நாம் இந்த முறையில் எளிதாக படங்களாக மாற்றலாம்.

புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு



மென்பொருள் செய்தி
புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 02:31.54 மு.ப GMT ]
புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன.
ஆனால் நமது விருப்பதற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பின் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம்.

Monday 7 November 2011

திரைபடங்களின் தரவரிசையை அறிந்துக்கொள்ள


திரைபடங்களின் தரவரிசையை அறிந்துக்கொள்ள
[ திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 04:25.11 மு.ப GMT ]
திரைப்பட தரவரிசை தள‌ம் என்றதும் இன்னொரு டாப் டென் பட்டியல் தளம் நினைத்துவிட வேண்டாம். மாறாக புதிதாக வெளியாகும் ஒவ்வொரு படத்திற்குமான ரசிகர்களின் தரவரிசையை வழங்கும் தளம் இது.
ரசிகர்களின் ரேட்டிங் என்றால் டிவிட்டரில் திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான மதிப்பீடு. புதிய படங்களை பார்த்ததுமே அது பற்றிய கருத்தை குறும்பதிவாக பதிவுசெய்யும் பழக்கம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி விட்டது. பல படங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய அளவுக்கு தற்போது இவை அமைந்துவிட்டது.
டிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திரைப்படங்களை மதிப்பிட உதவும் தளங்களும் பல இருக்கின்றன. டிவிட்பிலிக்ஸ் தளமும் இந்த ரகத்தை சேர்ந்தது தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களுக்கான ரேட்டிங்கை டிவிட்டர் கருத்துக்கள் அடைப்படையில் முன் வைக்கிறது.
அதாவது ஒரு படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றனர் என்பதை மதிப்பிட்டு சொல்கிற‌து. முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள படங்களுக்கான போஸ்டரை கிளிக் செய்தால் அந்த படத்திற்கான டிவிட்டர் மதிப்பீடு சதவீத்தில் காட்டப்படுகிற‌து.
அப்படியே படம் வெளியான காலம், மற்றும் அதன் நீளம் ஆகிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ள‌து. கூடவே அந்த படம் தொடர்பான டிவிட்டர் செய்திகளின் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் எத்தனை டிவிட்டர் பதிவுகள் என்னும் தகவலும் இடம் பெறுகிற‌து.
அதன் கீழே படத்தை பிடிச்சிருக்கு என்று சொன்னவர்களின் டிவிட்டர் பதிவுகளும் அருகிலேயே எனக்கு பிடிக்கவில்லை என்று சொனனவர்களின் கருத்துக்களும் வரிசையாக தோன்றுகின்றன. படங்களின் ரேட்டிங் கைகொடுக்கிறதோ இல்லையோ இந்த எதிரும் புதிருமான டிவிட்டர் பதிவுகளை படித்து பார்த்தால் படத்தில் எதை ர‌சிக்கலாம்,என்ன எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு ஏற்படும்.
அந்த புரிதலோடு திரையரங்கத்திற்கு போகலாம். நிச்சயம் ஹாலிவுட் பட பிரியர்களுக்கு வரப்பிரசதம் இந்த தளம்.

Sunday 6 November 2011

மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு


மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 06:20.40 மு.ப GMT ]
வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமானதாகி விட்டது. இணையதளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.
மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம் போல் செயல் பட்டு கொண்டிருக்கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம்.
தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல்படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணையதளம் வழங்குகிறது.
இந்த தளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன்ற இரு மொழிகளில் காணப்படுகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து வரும் விண்டோவில் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மொழியை தேர்வு செய்தவுடன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல் படும் விதமும் கொடுத்து இருப்பார்கள்.
இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத்தின் பெயரும் அது என்ன வேலையை மேற்கொள்கிறது என்ற விவரங்களும் உங்களுக்கு காட்டப்படும்.
இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

Thursday 27 October 2011

நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்


நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 07:30.16 மு.ப GMT ]
ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.
என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.
இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.
நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.
எப்படி என்றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.
Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.

Wednesday 19 October 2011

Simpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு


Simpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 01:16.56 பி.ப GMT ]
சில மவுஸ் கிளிக்குகளில் வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு உதவுகிறது Simpper Video Mail.
அத்துடன் பேஸ்புக் நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணணியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது.
வீடியோ ரெக்காடிங்க் செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த டூல் மூலம் வீடியோவை ரெக்காட் செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். அடோபியில் ஏர் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குகிறது இந்த மென்பொருள்.
நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில் கம்பிரஸ் செய்துவிடுகிறது.

Monday 10 October 2011


ஒரே சமயத்தில் ஜந்துமொழிகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு
[ திங்கட்கிழமை, 10 ஒக்ரோபர் 2011, 08:36.53 மு.ப GMT ]
ஒரே சமயத்தில் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்களை அறியலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
இதனை உங்கள் கணணியில் நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.
அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.
தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.
http://www.4shared.com/file/QBxsZ1mr/translator.html

Saturday 1 October 2011

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஒக்ரோபர் 2011, 04:33.25 மு.ப GMT ]
குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.
ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.

Friday 23 September 2011

Cheat Books Database: விளையாட்டு பிரியர்களுக்கான மென்பொருள்


Cheat Books Database: விளையாட்டு பிரியர்களுக்கான மென்பொருள்
[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 05:01.04 மு.ப GMT ]
கணணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவார்கள்.
சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள்.
விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம் அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.
கணணியில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு Cheat codes வேண்டும் என்றால் நீங்கள் அதனை கூகுளில் தேடி கண்டுபிடிக்கலாம்.
இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் Cheat Books Database. இதில் 20000க்கும் மேற்பட்ட விளையாட்டுகளின் ரகசியச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில முக்கியமான இடங்களில் எப்படி விளையாட வேண்டுமென்ற குறிப்புகளும் இதில் தரப்படுகிறது.
இது Database என்ற பெயருக்கேற்ப அனைத்து தகவல்களும் இதன் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் PC, Walkthroughs, Playstation, Playstation 2, Playstation 3, Sega, Nintendo 64, Nintendo DS, DVD, Gameboy Advance, Gameboy Color, N-Gage, Nintendo DS, XBox, XBox 360, iPhone, Gamecube, Dreamcast, Super Nintendo, Wii, Sony PSP போன்ற வெவ்வேறு வகையான கருவிகளில் விளையாடக்கூடிய விளையாட்டுகளின் குறிப்புகள் மற்றும் சீட் கோட்களை ஒரே இடத்தில் தொகுப்பாகப் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு எதேனும் ரகசியச்சொற்கள் தெரிந்திருப்பின் இதிலேயே புதிதாக சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அப்டேட் செய்து கொண்டால் அண்மைய குறிப்புகள் அனைத்தும் இந்த மென்பொருளில் இணைந்து விடும்.
இதில் எளிதாக விளையாட்டுகளின் வரிசைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எளிதாகத் தேடுவதற்கும் வசதியிருக்கிறது. இங்கிருந்தே குறிப்பிட்ட விளையாட்டுக்கு இணையத்திலும் தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இலவச மென்பொருள் விளையாட்டுப் பிரியர்கள் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள் ஆகும்.
http://www.cheatbook.de/cheatbookdatabase2011.htm

Thursday 22 September 2011

பாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள்


பாடல்களை தேடி தரவிறக்கம் செய்யும் மென்பொருள்
[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 04:39.48 மு.ப GMT ]
நாம் இணையத்தளங்களில் பாடல்களை தரவிறக்கம் செய்ய பல இணையத்தளங்களுக்கு சென்று அங்கு நாம் தேடும் பாடல்களை தேடியே தரவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது.
பல்வேறுபட்ட இணையத்தளங்களில் இருந்து MP3 பாடல்களை தேடவும், மிக விரைவாக தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவுகிறது MUSIC2PC என்ற மென்பொருள்.
இந்த மென்பொருளின் உதவியுடன் நீங்கள் விரும்பும் பாடலாகவோ அல்லது பாடகர்களின் பெயரை அல்லது இசை ஆல்பங்களின் பெயர்கள் மூலம் பாடல்களை தேட முடியும்.
இதன் வசதிகள்:
1. மிக விரைவான தேடல் வசதி(பாடலின் பெயர், கலைஞரின் பெயர், இசை ஆல்பம்) என தேடல் வசதி கொண்டது.
2. தேடல் முடிவுகளில் இருந்து அதி விரைவாகவும், சிறந்த தரத்துடனும் பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
3. ஒரே நேரத்தில் பல பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியும்.
4. இந்த மென்பொருளை PORTABLE, DESKTOP வடிவில் பெற முடியும்.
இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படும்.

Wednesday 21 September 2011

ஜிமெயிலில் தகவலுடன் படங்களை இணைத்து அனுப்புவதற்கு


ஜிமெயிலில் தகவலுடன் படங்களை இணைத்து அனுப்புவதற்கு
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 09:39.52 மு.ப GMT ]
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது.
இதனைப் பயன்படுத்தாதவர் கூட எதற்கும் இருக்கட்டும் என மின்னஞ்சல் கணக்கு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.
ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் பல. புகைப்படங்கள் மற்றும் படங்களை தங்கள் மின்னஞ்சலுடன் அனுப்ப விரும்புபவர்கள் அவற்றை இணைத்துத் தான் அனுப்புகின்றனர்.
அஞ்சலின் ஒரு பகுதியாக ஒட்டி அனுப்ப இயலவில்லை. செய்தியுடன் இணைத்து அனுப்புவதற்கு ஜிமெயில் தளத்தைத் திறந்து Gmail Labs செல்லவும்.(இதற்குச் சென்று அதிகப் பழக்கம் இல்லை என்றால் ஜிமெயில் அக்கவுண்ட்ஸ் செட்டிங்ஸ் சென்று அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.) இங்கு வரிசையாக நமக்கான வசதிகளை செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும்.
இதில் "Inserting Images" என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும். அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் "Enable" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அப்படியே கீழாகச் சென்று "Save Settings" என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால் அதில் புகைப்படம் மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்து அவற்றை மின்னஞ்சலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம். புகைப்படம் குறித்த குறிப்புகளைக் கீழாக எழுதலாம்.
இவ்வாறு புகைப்படத்தினை இணைக்கையில் கூகுள் Remember: Using others’ images on the web without their permission may be bad manners, or worse, copyright infringement என ஒரு எச்சரிக்கை தரும். ஏனென்றால் புகைப்படம் மற்றும் படங்களின் உரிமையாளரின் அனுமதி இன்றி அவற்றை உங்கள் மின்னஞ்சலில் பயன்படுத்துவது தவறாகும்.
நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன் ஜிமெயில் அதனை நீங்கள் Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன் உங்கள் ஜிமெயில் செய்தியில் கர்சரை எங்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கு ஒட்டிவிடும். இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம்.
அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
சரி படத்துடன் குறிப்புகளோடு உங்கள் நண்பருக்கு மின்னஞ்சலை அனுப்பிவிட்டீர்கள். அவர் இதனைக் காண முடியுமா? பழைய இமெயில் கிளையண்ட் பயன்படுத்தினால் நிச்சயம் படங்களைக் காண இயலாது.
படத்திற்குப் பதில் ஒரு எக்ஸ் மார்க் அடையாளம் மட்டுமே கிடைக்கும். அவர் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் எச்.டி.எம்.எல். பார்க்கும் வகை இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது: அறிவியல் விளக்கம்


வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது: அறிவியல் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:58.56 பி.ப GMT ]
வானம் ஏன் நீல நிறமாக தோன்றுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் தோன்றியிருக்கலாம்.
ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும்.
பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது.
பொதுவாக சூரியனில் இருக்கும் நிறமானது பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலாம். வாயுமண்டலத்தில்(ATMOSPHERE) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென், 21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு.
அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது. ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமியை வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய துணிக்கைகள் நிறத்தை உருவாக்குகின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
இவைகள் காற்றிலுள்ள ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது.(சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால் மேலே கூறப்பட்ட ஒளியால் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.
பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமாக இருந்தால் அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும். வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலை மாலை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது மட்டும் சிவப்பாக தெரிகிறது. அதற்கு காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகள் மின்குமிழில் இருந்து வரும் வெள்ளை, நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது.
உறிஞ்சிய அணு மண்டலத்தில் மூலக்கூறுகள் இடையூறில்லாமல் நீர்த்துளிகள் மற்றும் பனிமூட்டம் போன்றவற்றின் மீது பயணம் செய்வதால் வானம் நீலநிறமாக இருப்பது போல தோன்றுகிறது.
வானம் என்பதில் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் அப்போது மட்டும் குறைவாக தெரிகிறது. வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிக துடிப்புடனும் சிவப்பு நிறம் மிகக் குறைந்த துடிப்புடனும் இருக்கிறது.
நாம் பார்ப்பது என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும் போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் போது ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறம் மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறமாக தெரிகிறது.
இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

ஆலோசனைகள் வழங்கும் இணையம்


ஆலோசனைகள் வழங்கும் இணையம்
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 09:32.02 மு.ப GMT ]
இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை, மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப்.
இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் டிரைசைடருக்கு இதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடில்லை.
டிரைசைடர் போல இதிலும் ஆலோசனை தேவைப்படும் கேள்வியை டைப் செய்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நண்பர்களை கருத்து சொல்ல அழைக்கலாம். கேள்விகள் சிறு தடுமாற்றத்திலிருந்து மாபெரும் குழப்பம் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
என்ன புத்தகம் படிக்கலாம் என்பதில் துவங்கி யாரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்னும் வாழ்க்கையை தீர்மானிக்கும் கேள்வியாகவும் இருக்கலாம்.
உண்மையிலேயே குழப்பத்தில் தடுமாறி யாராவது சரியான யோசனை சொல்லி வழிகாட்ட மாட்டார்களா என்னும் கேள்வியையும் கேட்கலாம். இல்லை மற்றவர்கள் என்ன தான நினைக்கின்றனர் பார்க்கலாம் என்னும் நோக்கத்திலான கேள்வியையும் கேட்கலாம்.
கேள்வியை கேட்டவுடன் அதற்கு நீங்கள் தீர்வாக கருதும் எண்ணங்களையும்(முடிவுகள்)குறிப்பிடலாம். நண்பர்கள் இந்த கேள்வியை படித்து விட்டு தங்களுக்கு எது சரியென படுகிறதோ அதில் வாக்களிப்பார்கள். எந்த முடிவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அதனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
நண்பர்கள் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு தங்கள் யோசனைகளையும் தெரிவிக்கலாம். இந்த யோசனைகள் திறந்த மனதோடு நண்பர்களோடு ஒரு விஷயம் குறித்து கலந்துரையாடி தெளிவு பெறுவது போலவும் அமையலாம்.
சில நேரங்களில் நண்பர்களின் கருத்து முற்றிலும் புதிய கோணத்தை சுட்டிக்காட்டலாம்.புதிய வாசலை திறந்து விடலாம்.
ஆனால் நண்பர்களை ஒன்று திரட்டி ஆலோசனை நடத்துவது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. ஆஸ்க் மை மாப் சேவையோ இருந்த இடத்திலிருந்தே நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்ய உதவுகிறது.
இதுவா அதுவா என முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போது, நடுநிலையான கருத்துக்கள் தேவைப்படும் போது, நேர்மையான யோசனைகள் உடனடியாக தேவைப்படும் போது என எப்போது வேண்டுமானாலும் இங்கு ஆலோசனை கேட்கலாம்.
டிரைசைடரில் பதிவு செய்யாமலேயே ஆலோசனை கேட்கலாம். இதில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பின் அவருக்கென்று தனி பக்கம் ஒதுக்கப்படும். அதில் கேள்விகளுக்கான ஆலோசனைகளை பார்க்கலாம். வாக்குகளை தெரிந்து கொள்ளலாம்.
நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது போலவே நீங்களும் நண்பர்களின் தடுமாற்றத்திற்கு யோசனை சொல்லலாம். டிவிட்டரில் செய்வது போல உங்களுக்கு ஆர்வம் உள்ள கேள்விகளை பின்தொடரலாம். பின்தொடரப்படும் கேள்விகளுக்கான சமீபத்திய யோசனைகளை உங்கள் பக்கத்திலேயே தெரிந்து கொள்ள முடியும்.
உண்மையிலேயே இந்த பின்தொடரல் சுவாரஸ்யமான விஷயம். உங்களை பாதித்த ஒரு கேள்விக்கு மற்றவர்கள் என்ன பதில் சொல்கின்றனர் என்று அறிய முடிவதும், ஈடுப்பாட்டை ஏற்படுத்தும் பிரச்ச்னை எப்படி முடிவுக்கு வருகீறது என்று தெரிந்து கொள்வதும் உயிரோட்டமானது தான்.
ஆர்வத்தை உண்டாக்கிய ஒரு கேள்வி எத்தகைய விவாத்தை உண்டாக்கி அதற்கான் தீர்வு எப்படி கருக்கொள்கிறது என்பது புதிய வெளிச்சத்தை பாய்ச்சலாம்.
ஆனால் இப்போதைக்கு இத்தகைய தீவிர விவாதம் நடப்பதாக தெரியவில்லை. ஆஸ்க் மை மாபில் கேட்கப்படும் கேள்விகளில் பல விளையாட்டுத்தனமாக இருக்கின்றன. சில வில்லங்கமாகவும் இருக்கின்றன. கேள்விகளை சுற்றி இதயபூர்வமான விவாதம் நடப்பதாகவும் தெரியவில்லை.
அறிமுக நிலையில் இருப்பதால் இவ்வாறு இருப்பாதாக கொள்ளலாம். இந்த தளத்திற்கு என்று மனம் திறந்து கேட்கவும் உள்ளன்போடு பதில் சொல்லக்கூடிய ஒரு துடிப்புள்ள சமூகமும் உருவானால் பல அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
அதற்கான ஈர்ப்பு இந்த தளத்திடம் உள்ளது.ஆனால் அத்தகைய ஆதரவு கிடைக்கும் வரை இந்த தளம் தாக்குபிடிக்க வேண்டும். இணையதள வடிவில் மட்டும் அல்லாது செல்போன் செயலி வழி வழியிலும் இந்த சேவையை அணுகலாம்.

நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்

http://anonymouse.org/cgi-bin/anon-email.cgi

நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 07:24.11 மு.ப GMT ]
இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.
இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.
Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்.

நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு


நம்முடைய ஐடி தெரியாமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 07:24.11 மு.ப GMT ]
இணையத்தில் இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில், யாகூ, ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள்.
இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புகிறோம்.
ஆனால் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம் மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மின்னஞ்சல் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.
Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆனதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.
Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விடலாம்.

Monday 19 September 2011

MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு


MP3 கோப்புகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:27.34 மு.ப GMT ]
இணையத்தில் பிரபல வீடியோ தளமான யூடியுப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த தளத்தில் லட்சக்கணக்கான வீடியோக்கள் குவிந்து காணப்படுகின்றன.
இதில் வாசகர்களும் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த தளத்தில் வீடியோ கோப்புகளை மட்டுமே பகிர முடியும். ஆனால் உங்களிடம் உள்ள ஓடியோவை மற்றவர்களுடன் யூடியூபில் பகிர ஒரு சுலபமான குறுக்கு வழி.
இதற்கு முதலில் இந்த தளத்தில் Mp3tou செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Choose Background Image பகுதியில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் வீடியோவில் தெரியவேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
புகைப்படம் அதிகபட்சம் 5MB மேல் இருக்க கூடாது JPEG  கோப்பாக இருக்க வேண்டும்.
புகைப்படத்தை தெரிவு செய்தவுடன் அந்த புகைப்படம் பதிவேற்றமாகி அந்த தளத்தில் சேர்ந்து விடும்.
அடுத்து Step 2 உள்ள Choose backsound file என்பதை கிளிக் செய்து உங்கள் MP3 பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சம் 35MB தான் இருக்க வேண்டும்.
MP3 கோப்பின் அளவை பொருத்து அது பதிவேற்றமாக நேரம் எடுக்கும் அதுவரை பொறுத்திருக்கவும். பதிவேற்றமாகி முடிந்ததும் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Go Create என்பதை கிளிக் செய்யவும.
Go Create கிளிக் செய்ததும் உங்கள் வீடியோ ரெடியாகும். அதில் இரண்டு லிங்க் இருக்கும் Download it என்பதை கிளிக் செய்தால் வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கமாகி விடும்.
தரவிறக்கம் செய்த பிறகு யூடியுப் தளத்திற்கு சென்று upload பட்டனை அழுத்தி வீடியோவை யூடியூபில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது இந்த தளத்தில் உள்ள Upload it to youtube லிங்கை கிளிக் செய்து நேரடியாக யூடியுப் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆனால் அந்த முறை பாதுகாப்பானது இல்லை என்பதாலும் நமது மின்னஞ்சல் முகவரிக்கு ஸ்பாம் மெயில்கள் அனுப்பப்படும் ஆபத்தும் உள்ளதால் அந்த முறையை உபயோகிக்க வேண்டாம்.

மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதற்கு


மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை தனித்தனியாக பிரித்தெடுப்பதற்கு
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 08:21.19 மு.ப GMT ]
மிகப்பெரிய கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
இவ்வாறுள்ள மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder ஆக நாம் விரும்பும் Size-ல் பிரிக்கலாம். மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக துண்டு துண்டாக பிரிக்க நமக்கு ஒரு மென்பொருள் உதவுகிறது. பிரிக்கும் Size -ஐயும் நாமே முடிவெடுக்கும் வண்ணம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கலாம். தரவிறக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Destination Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split என்பதை சொடுக்கினால் போதும்.
உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம்.

தினம் ஒரு பொன்மொழியை அறிந்து கொள்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:54.18 மு.ப GMT ]
இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல. பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.
சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம்(கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன.
பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்கவல்லவை என்ற போதிலும் இந்த பொன்மொழி தளங்களுக்கு தினமும் விஜயம் செய்து புதிய பொன்மொழிகளை தினமும் படித்துப்பார்க்கும் வழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது சொல்லுங்கள்.
எப்போதாவது மேற்கோள் காட்ட பொன்மொழிகள் தேவைப்பட்டால் தான் இந்த தளங்களின் ப‌க்கம் செல்வது உண்டு. மற்றபடி தினம் ஒரு சொல் அறிவோம் என்பது போல தினம் ஒரு பொன்மொழி அறிவோம் என்றெல்லாம் யாரும் முயற்சிப்பதில்லை.
ஆனாலும் கூட பள்ளிக்கூட சுவர்களிலோ அல்லது அலுவலக கரும்பலகைகளிலோ எழுதப்படும் பொன்மொழிகளை நாம் பார்த்து ரசித்து சிந்திக்காமல் இருப்பதில்லை. ரீட்ரஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளில் முன் பக்கத்தில் இடம் பெறும் பொன்மொழிகளை முதலில் படித்து மகிழும் வாசக‌ர்கள் எண்ணற்றவர் இருக்கின்றனர்.
இவ்வளவு ஏன் நண்பர்களின் வீடுகளில் அழகான காட்சி அமைப்போடு இருக்கும் படங்களில் இடம் பெற்றிருக்கும் பொன்மொழி வாச‌கங்களை எல்லோருமே படித்து ர‌சிக்கவே செய்கிறோம்.
இருந்தும் ஏன் பொன்மொழி தோட்டம் போன்ற தளங்களுக்கு நாம் தினமும் சென்று தின‌ம் ஒரு பொன்மொழியை படித்து ஊக்கம் பெறுவதில்லை. இதற்கான பதில் தெரியவில்லை. ஆனால் அழகான ஒரு தீர்வு இருக்கிறது. பொன்மொழி ரகசியம்(கோட் சீக்ரெட்) என்னும் இணைய‌தளம் தான் அந்த தீர்வு.
இந்த தளத்திற்கு ஒருமுறை சென்றால் போதும் அதன் பிறகு தினந்தோறும் பொன்மொழிகள் உங்களை தேடி வரும். அதாவது மின்னஞ்சலில் தினம் ஒரு பொன்மொழி அனுப்பி வைக்கப்படும். அதற்கு உறுப்பினராக‌ பதிவு செய்து கொள்ள‌ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் சிந்தித்து ஊக்கம் பெறுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம், அதன் உறுப்பினர்களுக்கு நாள்தோறும் ஒரு பொன்மொழியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிற‌து.
எப்படியும் தினமும் மின்னஞ்சல் பார்க்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிற‌து. பலருக்கு காலை எழுந்ததுமே மின்னஞ்சல் முகத்தில் விழிக்கும் பழக்கமும் இருக்கிற‌து.
எனவே இந்த சேவையில் உறுப்பினராகிவிட்டால் தினமும் பொன்மொழி தளங்களின் பக்கம் போகாவிட்டாலும் கூட மின்னஞ்சல் வழியே புதிய பொன்மொழியை படித்து விடலாம்.
தினம் ஒரு பொன்மொழியை அனுப்பி வைப்பதோடு இந்த தளம் அந்த பொன்மொழி தொடர்பான கேள்வி ஒன்றையும் அனுப்பி வைத்து சிந்திக்க வைக்கிற‌து. இந்த தள‌த்தில் இன்றே சேருங்கள், நாளை முதல் பொன்மொழி படித்து ஊக்கம் பெறுங்கள்.
http://www.quotesecret.com/

Sunday 18 September 2011

குரோம் உலாவியில் கூகுள் ப்ளஸ் ஐகானை இணைப்பதற்கு



கணணி செய்தி
குரோம் உலாவியில் கூகுள் ப்ளஸ் ஐகானை இணைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:46.37 மு.ப GMT ]
கூகுள் பிளஸ் வந்த வேகத்தில் அனைவரிடமும் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
எளிமையான முகப்பு தோற்றமும் அதிகமான சேவையும் தான் மக்களை இதன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குரோம் உலாவியில் எளிதாக கூகுள் பிளஸ் பயன்படுத்துவதற்காக புதிதாக ஒரு நீட்சி வந்துள்ளது.
பேஸ்புக்கிற்கு இணையான ஒரு சோசியல் நெட்வொர்க் கூகுள் தரப்பில் இருந்து வெளிவந்து அனைவராலும் பயன்படுத்தும்படி வளர்ந்து இருக்கிறது. கூகுள் பிளஸ் சேவையை நாம் குரோம் உலாவியில் ஒரே சொடுக்கிலிருந்து பயன்படுத்தலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது.
குரோம் உலாவியில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தனை சொடுக்கி எளிதாக நிறுவலாம். கூகுள் பிளஸ்(Google Plus) நிறுவி முடித்ததும் கூகுள் பிளஸ் ஐகான் நமக்கு உலாவியின் முகப்பில் தெரியும்.
இதில் நம் கூகுள் பிளஸ் கணக்கை திறந்து வைத்துக்கொள்ள வேண்டியது தான், இனி கூகுள் பிளஸ் தளத்திற்கு சென்று அவ்வப்போது யாராவது செய்தி பகிர்ந்துள்ளனரா என்றெல்லாம் தேட வேண்டாம்.
ஒரே இடத்தில் இருந்து எத்தனை பேர் கூகுள் பிளஸ்-ல் செய்தி அளித்துள்ளனர் என்ற எண்ணிக்கையை பார்க்கலாம், மேலும் படிக்க வேண்டும் என்றால் கூகுள் பிளஸ் ஐகானை சொடுக்கி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

Saturday 17 September 2011

எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்


எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 10:44.25 மு.ப GMT ]
திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது.
நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு. அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது.
உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரிய நேரத்தில் செய்து கொள்ளவும் வசதியளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம்.
இந்த தளத்தின் மூலம் இன்றைய நாள், எதிர்வரும் நாள், வாரம், மாதம் என எதிர்கால திட்டங்களை இலகுவாகவும் விரைவாகவும் பதிவு செய்து கொள்ள முடியும்.
அத்துடன் நீங்கள் குறித்த நாளில் செய்ய வேண்டிய பணிகளை உங்களின் கூகுள் டாக்(GOOGLE TALK ) மூலம் இந்த தளம் உங்களுக்கு அறியத்தருகிறது.
இந்த தளத்தின் வசதியினை பெற உங்களின் கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ள வேண்டும். இந்த தளத்தின் வசதிகள் ஆப்பிள் மற்றும் ANDROID செயலிகளாக உங்கள் ஆப்பிள் மற்றும் ANDROID சாதனங்களில் தரவிறக்கம் செய்ய முடியும்.

Wednesday 14 September 2011

நன்றி நவிலல் இணையதளம்


நன்றி நவிலல் இணையதளம்
[ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 09:47.08 மு.ப GMT ]
நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.
நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்?
ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.
தீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம். இவ்வளவு ஏன் பிரபலங்களுக்கும், உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.
அதுவும் சரி தான் என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.
நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது. நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும், மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்.
ஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும், எப்படி சொல்வது, எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம். அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.
நன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. நண்பருக்கா, உறவினருக்கா, சக ஊழியருக்கா, யாருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும், நன்றி உணர்வின் வெளிப்பாடா, பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பொருத்தமானவற்றை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம். நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.
நன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம். யோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன்பட்டிருப்பது புரியும். பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம். சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம். மறந்திருப்போம். சொல்லாமல் விட்டிருப்போம்.
ஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது. அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது. எதிர்பாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.
நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.
நண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவா?அதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது?
நன்றி என்பது ஒரு நல்ல உணர்வு அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கும் அன்பு பெருகட்டும்.
http://thankuz.com/

Tuesday 13 September 2011

நோக்கியாவுக்கான PC Suite மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


நோக்கியாவுக்கான PC Suite மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2011, 08:54.00 மு.ப GMT ]
பேசுவதற்கு மட்டும் தான் கைத்தொலைபேசிகள் என்ற நிலை மாறி தற்போது கணணியில் செய்யகூடிய அனைத்து வேலைகளையும் கைத்தொலைபேசிகள் மூலமாகவும் செய்து விடலாம்.
நாம் நம்முடைய கைத்தொலைபேசிகளை கணணியுடன் இணைத்து பல வசதிகளை பெற PC Suite மென்பொருளை நம் கணணியில் இணைத்து இருக்க வேண்டும்.
இந்த PC Suite மென்பொருள் நாம் கைத்தொலைபேசி வாங்கும் போதே நமக்கு கொடுத்து இருப்பார்கள். ஆனால் அது பழைய பதிப்பு மென்பொருளாக இருக்கலாம்.
இப்பொழுது பிரபல நிறுவனமான நோக்கியா கைத்தொலைபேசிகளுக்கான PC Suite மென்பொருளின் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. இதனை தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தலாம்.

Monday 12 September 2011

கைத்தொலைபேசிகளுக்கு விதவிதமான ரிங்டோன்களை உருவாக்குவதற்கு


கைத்தொலைபேசிகளுக்கு விதவிதமான ரிங்டோன்களை உருவாக்குவதற்கு
[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 07:45.59 மு.ப GMT ]
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு கைத்தொலைபேசிகள் இருப்பதை காண முடிகிறது.
ஒருசிலரை அவர்களின் கைத்தொலைபேசிகள் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள்.
அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா உங்களுக்காக ஒரு புதிய இலவச மென்பொருள் உள்ளது.
இதற்கு கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதை நீங்கள் கணணியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன்பின் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Choose a Song from Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அந்த பட்டனை கிளிக் செய்து நீங்கள் ரிங் டோனாக மாற்ற வேண்டிய பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் ரிங்டோனாக உருவாக்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்வு செய்து கொண்டு Next என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து உங்களுடைய ரிங்டோன் சேமிக்க வேண்டிய இடத்தை கேட்கும் அதை தேர்வு செய்து விட்டால் போதும், அடுத்த சில வினாடிகளில் உங்களுடைய ரிங்டோன் ரெடியாகிவிடும்.

Wednesday 7 September 2011

உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க முடியும்: ஆய்வில் தகவல்


உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க முடியும்: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 07 செப்ரெம்பர் 2011, 07:07.19 மு.ப GMT ]
தினம் தோறும் குறிப்பிட்ட அளவு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தப் பிரச்சனையை தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட மைக்ரோஓவனில் வைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த பலனைத் தரும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது தினமும் கோல்ப் பந்து அளவில் 6- 8 உருளைக்கிழங்கை மதியம் சாப்பிடுமாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதே போன்று இரவு உணவின் போதும் சாப்பிடுமாறு கூறப்பட்டது.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டவர்கள் உடல் எடை அதிகம் உள்ளவர்களாகவும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களாகவும் இருந்தனர். ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை பயன்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.
அவர்களுக்கு ஒரு மாதம் உருளைக்கிழங்கு உணவில் தொடர்ந்து தரப்பட்ட போது அவர்களது உயர் ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்திருந்தது.
ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கவில்லை. அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி மாநாட்டில் இது தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு அமெரிக்க வேளாண்துறை உதவி

Sunday 4 September 2011

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு


இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு
[ திங்கட்கிழமை, 05 செப்ரெம்பர் 2011, 04:42.53 மு.ப GMT ]
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.
அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.
ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.
இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.
இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து  மின்னஞ்சல்களும் காட்டும்.
இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

Sunday 28 August 2011

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த


ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:43.36 மு.ப GMT ]
நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஓன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம், இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
ஓன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.
இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதாக ஒரே சொடுக்கில் செய்யலாம்.
கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.
புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம். நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஓன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம்.
http://ipiccy.com/editor

Friday 26 August 2011


எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் அனிமேசன் படங்களை உருவாக்குவதற்கு
[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:38.36 மு.ப GMT ]
நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி எளிதாக நாமே அனிமேசன் உருவாக்கலாம்.
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஓன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஓடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஓன்லைன் மூலம் செய்யலாம்.
எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். வீடியோ அல்லது ஓடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள் உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு திறமையான கார்டூன் வடிவமைப்பாளர் உருவாக்குவது போல் எப்படி உருவாக்கலாம் என்பதையும் அழகுடன் காட்டுகின்றனர்.
http://www.creazaeducation.com/

Thursday 25 August 2011

உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு


உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு
[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 04:43.11 மு.ப GMT ]
உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கல்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது.
உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான்.
ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான்.
வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
http://www.yatedo.com/