Wednesday 7 September 2011

உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க முடியும்: ஆய்வில் தகவல்


உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க முடியும்: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 07 செப்ரெம்பர் 2011, 07:07.19 மு.ப GMT ]
தினம் தோறும் குறிப்பிட்ட அளவு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தப் பிரச்சனையை தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட மைக்ரோஓவனில் வைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த பலனைத் தரும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது தினமும் கோல்ப் பந்து அளவில் 6- 8 உருளைக்கிழங்கை மதியம் சாப்பிடுமாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதே போன்று இரவு உணவின் போதும் சாப்பிடுமாறு கூறப்பட்டது.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டவர்கள் உடல் எடை அதிகம் உள்ளவர்களாகவும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களாகவும் இருந்தனர். ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை பயன்படுத்துபவர்களாகவும் இருந்தனர்.
அவர்களுக்கு ஒரு மாதம் உருளைக்கிழங்கு உணவில் தொடர்ந்து தரப்பட்ட போது அவர்களது உயர் ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்திருந்தது.
ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கவில்லை. அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி மாநாட்டில் இது தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு அமெரிக்க வேளாண்துறை உதவி

No comments:

Post a Comment