Monday 26 December 2011

கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 01:52.03 பி.ப GMT ]
அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும்.
கணணி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது கைபேசி உலகிலும் கால் வைத்துள்ளது.
முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் கைபேசிகளுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம்.
இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.
மென்பொருளில் உள்ள வசதிகள்:
Antivirus Production- Real time Production, Custom Updates
Web Shield
Call / SMS filter
Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
Firewall
Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது.
இந்த மென்பொருளை Avast for android தளத்தில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணணியில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யும் பொழுது உங்கள் கணணியோடு உங்கள் ஆன்ராய்ட் கைபேசி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Thursday 22 December 2011

Text Animation-ஐ உருவாக்கும் பயனுள்ள இணையம்


Text Animation-ஐ உருவாக்கும் பயனுள்ள இணையம்
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 05:26.58 மு.ப GMT ]
எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளிதாக Animation உருவாக்கலாம்.
இத்தளத்திற்கு சென்றவுடன் Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.
Font type, Font size, Background color, Direction(new), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும்.
நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணணியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.

Tuesday 6 December 2011

புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது கைபேசிக்கு தகவல் தெரிவிப்பதற்கு


புது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது கைபேசிக்கு தகவல் தெரிவிப்பதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 06 டிசெம்பர் 2011, 06:19.46 மு.ப GMT ]
தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது. அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்பதை கைத்தொலைபேசியின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப்படுத்துகிறது.
இந்த தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில்http://www.site2sms.com/userregistration.asp உங்களது பெயர், பாலினம், மின்னஞ்சல், தொழில், மாநிலம், கைபேசி எண், கடைசியாக உங்கள் city name ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
பதிவு செய்து முடித்தவுடனே உங்கள் கைபேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .

அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
011-47606762 Or Mail us on support@site2sms.com.
அதன்பின் டாஸ் போர்டுக்கு செல்லுங்கள். Settings Page-க்கு செல்லுங்கள்.
அந்த பக்கத்தில் எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ் வர வேண்டும் என்று கொடுத்து விடுங்கள்.
eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள்.
அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டு வந்து சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP ".
forward a copy of incoming mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை(123456789012@site2sms.com) கொடுக்கவும்.
உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மின்னஞ்சலை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் கைபேசிக்கும் வரும்.

Saturday 3 December 2011

இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு


இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு
[ சனிக்கிழமை, 03 டிசெம்பர் 2011, 08:46.37 மு.ப GMT ]
இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.
கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தி பதிவேற்றலாம்.
ஓடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம். எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும் கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம்.
ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஓன்லைனில் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.