| உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு |
| [ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 04:43.11 மு.ப GMT ] |
உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது. முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான். ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது. உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். |
Thursday, 25 August 2011
உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment