Thursday 27 October 2011

நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்


நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 07:30.16 மு.ப GMT ]
ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.
என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.
இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.
நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.
எப்படி என்றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.
Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.

No comments:

Post a Comment