| ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:43.36 மு.ப GMT ] |
ஓன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது. இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதாக ஒரே சொடுக்கில் செய்யலாம். கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது. புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம். நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஓன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம். |
Sunday, 28 August 2011
ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment