Monday 6 June 2011

வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க



பாதுகாப்பு செய்தி
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
[ வியாழக்கிழமை, 02 யூன் 2011, 04:17.54 மு.ப GMT ]
கணணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
சில கணணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை.
ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.
Iobit நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான Advanced System care மற்றும் GameBooster போன்றவையும் மிகுந்த பிரபலமான மென்பொருள்களாகும். இந்த மென்பொருளின் நோக்கமாக அவர்கள் "Extra Protection for your PC Sequrity" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மென்பொருள் என்னென்ன பாதுகாப்பை வழங்குகிறது?
1. ஆண்டிவைரஸ்களால் செய்ய முடியாத மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்கள்(Malwares, spywares) எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அழிக்கிறது. புதியதாக வராமல் தடுத்து பரவாமல் பார்த்துக் கொள்கிறது. மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்களும் வைரஸைப் போன்று கணணியைப் பாதிக்கச் செய்யக் கூடியவை.
2. இவை மட்டுமின்றி பலவகையான ஸ்பைவேர்கள், ஆட்வேர்கள்(Adwares), மோசமான ட்ரோஜன் வைரஸ்கள்(Trojans), Keyloggers, bots, worms, hijackers போன்றவற்றிலிரிந்து கணணியைப் பாதுகாக்கிறது.
3. இதன் DualCore நிரல் எஞ்சின் சிக்கலான மால்வேர்கள், ஒளிந்திருக்கும் ஸ்பைவேர்களை விரைவான நேரத்தில் கண்டறிந்து அழிக்கின்றன.
4. இதில் பலவகையான பாதுகாப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன. Startup guard, Process guard, Network guard, File guard, Cookie guard, Browser guard, USB guard, Malicious Action guard. இது போன்று கணணிக்கு எங்கிருந்தெல்லாம் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவை உள்ளே வரும் இடங்கள், பரவும் இடங்களில் உட்கார்ந்து கொண்டு அவற்றைக் கவனித்து அழிக்கிறது.
5. இந்த மென்பொருள் கணணியின் டிரைவர் கோப்புகளையும் சரியாக சோதித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. சோதிக்க மூன்று வசதிகள் தரப்பட்டுள்ளன. Smart Scan, Full Scan, Custom Scan.
ஆண்டிவைரஸ் கணணியில் நிறுவப்பட்டிருந்தாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இது ஏற்கனவே இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளோடு இணைந்து செயல்படக்கூடியது.

No comments:

Post a Comment