| உங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பதற்கு |
| [ புதன்கிழமை, 22 யூன் 2011, 04:39.55 மு.ப GMT ] |
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும். ஒரு முறை நாம் தட்டச்சு செய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழி பெயர்க்கலாம். இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் Translate(மொழி மாற்றம்) செய்ய வேண்டிய வார்த்தையை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும். கூகுள் துணையுடன் இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின் பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம். |
Sunday, 26 June 2011
உங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment