Monday 6 June 2011

சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையம்


சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையம்
[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 04:53.47 மு.ப GMT ]
சாதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் சச்சின் டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்றில்லை. நாம் செய்து முடித்த சின்ன சின்ன செயல்களை கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
மனதிற்கு இனிய பயணம் மேற்கொண்டிருந்தாலோ, புதிய ஊருக்கு சென்று வந்திருந்தாலோ உடனே அவை பற்றிய அனுபவத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள துடிப்போம் அல்லவா.
பேஸ்புக்கில் இதை தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இப்போது இந்த பகிர்வை இன்னும் கூட அழகாக இன்னும் சுவையாக செய்யலாம்.
அதாவது நமது சாதனைகளை, அதாவது நாம் செய்து முடித்தவற்றை அட்டகாசமான முறையில் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயல்கள் வழக்கமான பேஸ்புக் சுவர் செய்தியாக தோன்றாமல் உலக வரைபடத்தின் மீதேறி நாம் தகவல் தெரிவிப்பது போல கண்ணை கவரும் வகையில் தோன்றும்.
அதாவது நாம் எந்த இடத்திலிருந்து செயல்பட்டோமோ அந்த இடத்தில் இருந்து தகவல் தெரிவிப்பது போல இந்த பகிர்வு அமைந்திருக்கும். வரைபடத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில் பலூன் போன்ற ஒரு குறி தோன்றும். அதில் கிளிக் செய்தால் உங்கள் செயல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இப்படி தனியேவும் நமது செயல்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட அந்த நேரத்தில் யாரெல்லாம் உடனிருந்தனரோ அவர்கள் பெயர்களையும் சேர்த்து பகிர்ந்து கொள்ளலாம்.
பேஸ்புக்கில் சுவர் செய்தியாக ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வதைவிட இப்படி உலக வரைபடம் மூலம் பகிர்ந்து கொள்வது வண்ணமயமாக இருக்கும்.
கூகுள் வரைபட சேவை உதவியோடு இந்த சாதனை அறிவிப்பு சேவையை டிடிட் இணையதளம் வழங்குகிறது. பேஸ்புக் கணக்கு மூலமே இந்த சேவையை பயன்ப‌டுத்தலாம். பேஸ்புக் சார்ந்த் எத்தனையோ பயனுள்ள சேவைகளில் இதுவுமொன்று.

No comments:

Post a Comment