Friday 10 June 2011

உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாக திறக்க வைப்பதற்கு


உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாக திறக்க வைப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 07:20.55 மு.ப GMT ]
உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாகவே பயனாளர் பெயர், கடவுச்சொல் கொடுத்து திறக்க வைக்கலாம்.
முதலில் i macros எனப்படும் addon உங்கள் பயர்பொக்ஸ் பிரவுசர் அல்லது கூகுள் குரோமில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இதனை தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் பிரவுசரை மறுதொடக்கம் செய்து விடுங்கள். பிறகு addon ஐகான் தோன்றும். இதனை கிளிக் செய்ததும் start, record, play பட்டன்கள் இருக்கும். முதலில் Rec பட்டன் அழுத்துங்கள்.
பின் நீங்கள் உங்கள் ஜிமெயில் தளத்திற்கு சென்று வழக்கம் போல் உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைந்து உங்களது மின்னஞ்சலை படிக்கவோ அல்லது அரட்டையில் நண்பர்களுக்கு பதிலளிக்கவோ செய்யுங்கள்.
பிறகு உங்கள் ஜிமெயில்லை signout செய்து வெளியேறுங்கள். முடிந்தால் http://www.lankasritechnology.com/ என டைப் செய்து இந்த தளத்தை open செய்துவிட்டு stop பட்டனை அழுத்துங்கள்.
இதன் பின் play பட்டனை அழுத்துங்கள். முதலில் www.gamil.com திறந்து அதில் உங்களுடைய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை டைப் செய்து உங்கள் மின்னஞ்சல் திறக்கப்படும். பிறகு நீங்கள் chat செய்த நண்பருக்கு hai good morning என்று டைப் செய்து அனுப்பிவிடும். பிறகு அதுவாகவே மின்னஞ்சல் கணக்கிலிருந்து வெளியேறிவிடும்.
இதனை பார்ப்பதற்கு ஒரு magic போல இருக்கும் உங்கள் நண்பரிடம் செய்து காண்பித்து ஆச்சர்யம் கொடுக்கலாம். கணணி நிறுவனங்களில் தினமும் செய்யக்கூடிய வேலைகளை இதனை வைத்து automatic செய்து விடுவதால் மனிதர்களின் உதவியின்றி தானாகவே தினமும் செய்து விடும்.
நமக்கு twitter ,facebook , gmail போன்ற தளங்களை தானாக திறப்பதற்கு பயன்படுத்தலாம். மேலும் நமக்கு பிடித்த தளங்களை bookmark செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment