| மென்பொருள் செய்தி |
| குரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள் |
| [ புதன்கிழமை, 29 யூன் 2011, 05:11.21 மு.ப GMT ] |
ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும். ஆனால் கைத்தொலைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால் கணணியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது. மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும். உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும். இதில் Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் அரட்டையில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம். உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும். |
Wednesday, 29 June 2011
குரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment