Wednesday 6 July 2011

கணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய


கணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய
[ புதன்கிழமை, 06 யூலை 2011, 07:52.57 மு.ப GMT ]
உலகில் கோடிக்கணக்கான கணணிகள் இருந்தாலும் ஒவ்வொரு கணணிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கப்படுகிறது.
இந்த ஐ.பி எண்ணை வைத்து ஒரு கணணியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் இணைய திருடர்கள் கணணியின் ஐ.பி எண்ணை அடிப்படையாக கொண்டே கணணியை முடக்குகின்றனர்.
கணணியின் ஐ.பி. எண் சுலபமாக கண்டறிய பல இணையதளங்கள் உள்ளன. இந்த ஐ.பி எண்களை நாம் ஓப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். இந்த தளங்களில் ஐ.பி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர் மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.
1. What is my ip address: இந்த தளம் ஐ.பி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐ.பி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணணியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.
2. What Is My IP: இந்த தளத்தில் நம்முடைய கணணியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். தேவைப்படுபவர்கள் அதை படித்து ஐ.பி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
3. IP Address World: இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment