| கூகுளின் அழகிய எழுத்துருக்களை கணணியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த |
| [ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 04:43.17 மு.ப GMT ] |
எழுத்துரு என்பது கணணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதன் மூலமாக தான் நம்முடைய கணணியில் தகவல்களை பதிய முடியும் மற்றும் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் வடிவமைப்பு செய்ய பல வகையான எழுத்துருக்கள் இருந்தால் தான் நன்றாக வடிவமைக்க முடியும். கூகுள் 199 புதுவகையான எழுத்துருக்களை நமக்கு வழங்குகிறது. அந்த எழுத்துருக்களை எவ்வாறு நம் கணணியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கூகுள் இணைய எழுத்துருக்களுக்கு என்று ஒரு தனி தளத்தை உருவாக்கி சேவையை வழங்குகிறது. இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Google Fonts கிளிக் செய்யுங்கள். இந்த தளத்தில் 199 அழகிய எழுத்துருக்கள் உள்ளது. அவைகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள அந்த எழுதுருக்கு அருகில் உள்ள Add to Collections என்பதை கிளிக் செய்தால் அந்த எழுத்துரு உங்கள் பட்டியலில் சேர்ந்து விடும். உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொண்டவுடன் மேலே உள்ள Download your Collections என்ற லிங்கை அழுத்தினால் போதும். நீங்கள் தேர்வு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் கணணியில் தரவிறக்கம் ஆகும். உங்களுக்கு கிடைத்த .zip கோப்பை extract செய்து கணணியில் நிறுவி பயன்படுத்தி கொள்ளுங்கள். |
Thursday, 21 July 2011
கூகுளின் அழகிய எழுத்துருக்களை கணணியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment