Wednesday 6 July 2011

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 04:31.00 மு.ப GMT ]
தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர். இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு.
இனி அந்த கவலை வேண்டாம். நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம். தினமும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சில தளங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
அதில் இருப்பது போல் வண்ணம் நம் தளத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம். Enter Url என்பதை சொடுக்கி நாம் வண்ணத்தை மாற்ற விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் வலது பக்கம் இருக்கும் Hue, Saturation, Lightness,C ontrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு கலர் மாற்றம் செய்து Proceed என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download Result என்பதை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம்.

No comments:

Post a Comment