Thursday 19 May 2011

கோப்புக்களை மாற்றம் செய்வதற்கு


கோப்புக்களை மாற்றம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 19 மே 2011, 07:02.56 மு.ப GMT ]
ஓடியோ கோப்புக்களை ஒரு போர்மட்டிலிருந்து மற்றொரு போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும்.
ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
நாம் சாதாரணமாக பாடல்களை மாற்றம் செய்ய வேண்டுமெனில் கணணியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக மாற்றம் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்க பெறாது. அவ்வாறான வேலையில் நாம் பாடல்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய பாடல் கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது மாற்றம் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.
மேலும் ஒரு வசதி என்னவெனில் பாடலை நம்முடைய விருப்பபடி மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது. WAV, MP3, AAC, AIF, AU, FLAC, M4A, OGG, WMA, மற்றும் M4R போன்ற போர்மட்டுகளில் பாடல்களை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
பாடல்களை எளிமையான முறையில் மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். கைத்தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு பாடல்களை மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment