| கணணி பராமரிப்புக்கு சில ஆலோசனைகள் |
| [ திங்கட்கிழமை, 30 மே 2011, 04:08.37 பி.ப GMT ] |
தற்போதைய தொழில்நுட்ப உலகில் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணணி தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணணியில் தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது. நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணணி வழி தான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணணி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்? நாம் கணணியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது அல்லது நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணணியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது? இதுபோன்ற நிலையைத் தவிர்த்து நம் கணணியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம். கணணிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணணியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் வன்தட்டில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். வைரஸ் ஒழிப்பு மென்பொருளை நிறுவிக் கொள்ளவும்: எந்த ஒரு கணணியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம். சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஓன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை தரவிறக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயர்வால் நிறுவிக் கொள்ளவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் பயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விடயங்கள் உங்கள் கணணிகளை ஊடுருவதிலிருந்து பயர்வால் தடுக்கும். உங்கள் கணணிகளில் உங்களுக்கு தெரியாமலேயே தரவிறக்கம் ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் பயர்வாலுக்கு உண்டு. விண்டோஸ் எக்ஸ்.பி மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஓபரேட்டிங் சிஸ்டம்கள் பயர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது. டீப்ராக் செய்யவும்: டீப்ராக்மென்டேஷன் என்பது நம் கணணியின் வன்தட்டை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணணியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை நிறுவிக் கொள்கிறோம் அல்லது நிறுவியவற்றை ரத்து செய்கிறோம். கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும். வன்தட்டை சுத்தம் செய்யவும்: உங்கள் கணணியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் சுவடுகளையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும். இணையதள தரவிறக்கங்களை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை தரவிறக்கம் செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை தரவிறக்கம் செய்வோம். இதிலெல்லாம் கணணியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் தரவிறக்கம் செய்து கொள்வது நலம். பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் வன்தட்டில் அதிக இடம் கிடைக்கும். கணணியின் செயல்திறன் அதிகரிக்கும். கணணியை சுத்தம் செய்யவும்: கணணியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணணியை வெப்பம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும். |
Monday, 30 May 2011
கணணி பராமரிப்புக்கு சில ஆலோசனைகள்
மனித மூளையில் இருக்கும் ரகசியங்களை ஆய்வாளர்கள் அறிய முடியும்
| தி |
| மனித மூளையில் இருக்கும் ரகசியங்களை ஆய்வாளர்கள் அறிய முடியும் |
| [ திங்கட்கிழமை, 30 மே 2011, 01:33.17 பி.ப GMT ] |
மூளையில் படியும் வார்த்தைகளை கண்டறிய விஞ்ஞானிகள் மின்கடத்தி எனப்படும் எல்க்ட்ரோடுகளை பயன்படுத்தினர். இதன் மூலம் எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மூளையில் பதிவாகும் மொழி வார்த்தைகளை அறிய முடிகிறது. மனம் எனப்படும் மூளையில் உள்ள தகவல்களை வேறு யாருமே அறிய முடியாது. மனதில் உள்ள ரகசியம் சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற காலம் மலையேறி வருகிறது. மூளையில் உள்ள வார்த்தை பதிவுகளை கண்டறியும் ஆராய்ச்சியை வாஷிங்டன் பல்கலைகழகத்தின் நரம்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் மேற்கொண்டனர். இந்த ஆய்வு இத்துறையின் இயக்குனர் எரிக் லெதார்ட் தலைமையில் நடத்தப்பட்டது. சிந்திப்பதில் தடுமாற்றம் உள்ள நரம்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு 64 எலக்ட்ரோடுகளை மூளைப்பகுதியில் பதித்து ஆய்வு செய்யப்பட்டது. மூளை நரம்புப் பகுதியில் எதனால் குறைபாடு ஏற்படுகிறது என்பதை கண்டறிய கூடுதல் எல்க்ட்ரோடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். ஒலிகளை பற்றி சிந்திக்கும் மூளை ஒருவித சமிஞ்ஞைகளை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பேசும் போது வேறுவித நிலை காணப்படுகிறது. ஓபரேஷன் செய்யாமலே மூளை விவரங்களை இந்த புதிய ஆய்வின் மூலம் அறிய முடியும். இந்த ஆய்வு அறிக்கை நியூரல் என்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்டு உள்ள |
Sunday, 29 May 2011
Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்
| Goosh: கூகுளின் புதிய தேடல் தளம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011, 07:39.21 மு.ப GMT ] |
எந்த விடயமானாலும் அள்ளித்தரும் கூகுளை யார் தான் விரும்பமாட்டார்கள்? ஆனால் கூகுளின் தேடல் தளத்தையே வித்தியாசமான முறையில் ஒருவர் அமைத்திருக்கிறார். கூகுளின் தேடல் நிரல்களைக் கொண்டு புதிய முறையில் உருவாக்கிய அவரின் பெயர் ஸ்டீபன். யூனிக்ஸில் கூகுள் தேடலைப் பயன்படுத்தினால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு தளத்தை உருவாக்கியிருக்கிறார். யூனிக்ஸ்(Unix OS) தெரியுமா உங்களுக்கு? உலகின் முன்னோடியாக இருந்த இயங்குதளம். இப்போது பலவிதங்களில் வந்து கொண்டிருக்கும் லினக்ஸ் பதிப்புகளின் ஆதாரம் யூனிக்ஸ் இயங்குதளமாகும். லினக்ஸை வடிவமைத்த லினஸ் டோர்வால்ட்ஸ்(Linus Torvalds) யூனிக்ஸின் முக்கிய நிரல்களைக் கொண்டு தான் லினக்ஸை உருவாக்கினார். யூனிக்ஸில் எல்லாமே தட்டச்சிடுகிற கட்டளைகளைக்(Input commands) கொண்டு தான் வேலையே செய்ய முடியும். கட்டளைகள் மூலம் யூனிக்ஸ் இயங்குதளத்தில் வேலை செய்தால் எப்படி இருக்குமோ அப்படி கூகுள் தேடலை Goosh.org என்ற இணையதளமாக உருவாக்கியுள்ளார். கூகுளின் இடைமுகம்(Google Interface) யூனிக்ஸில் உள்ளதைப் போல இருக்கிறது. நீங்கள் தேட வேண்டிய தகவலை இத்தளத்தில் யூனிக்ஸ் கமாண்ட் போல அடிக்க வேண்டும். பிறகு 5 முடிவுகள் மட்டும் காட்டப்படும். மேலும் அதிக தகவல்கள் வேண்டுமெனில் m அல்லது more என்ற கட்டளையை அடிக்க வேண்டும். மேலும் உதவிக்கு h அல்லது help என்று அடித்தால் இத்தளத்தில் பயன்படுத்தக் கூடிய கமாண்டுகளின் பட்டியல் விவரம் தெரியும். பயன்படுத்திப்பார்த்தால் உங்களுக்கு அந்தக் கால நினைவுகள் வரும். இவரின் தளம் கூகுளின் மூலநிரல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. ஆனால் கூகுளுக்கும் இவரின் தளத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இத்தளம் திறந்த மூலநிரல்(Open Source) அடிப்படையில் இதனுடைய நிரல்களை வழங்குகிறது. இதனை இங்கு தரவிறக்கிக் கொள்ளலாம். |
Saturday, 28 May 2011
சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்
| சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம் |
| [ சனிக்கிழமை, 28 மே 2011, 03:55.56 பி.ப GMT ] |
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. 1. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. 2. குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது. 3. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும். 4. முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும். 5. செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம். 6. சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். 7. புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. 8. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 9. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். 10. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும். 11. அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகு |
Qwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு
| Qwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு |
| [ சனிக்கிழமை, 28 மே 2011, 07:40.17 மு.ப GMT ] |
அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwiki உள்ளது. என்ன தகவல் வேண்டும் அதைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை நாம் காண முடியாது. ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப் போக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் தளம் தான் Qwiki. இத்தளத்திற்கு சென்று Enter Topic என்ற கட்டத்திற்குள் எதைப்பற்றிய தகவல் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Enter பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்துள்ள தலைப்பிற்கு தகுந்தபடி உள்ள பல வீடியோக்களில் ஒவ்வொன்றாக சொடுக்கி பார்க்கலாம். இந்த Qwiki விக்கியில் மில்லியன் கணக்கில் பல வீடியோக்கள் உள்ளது. இனி நாம் தேடும் பல தகவல்களை வீடியோவுடன் பார்க்கலாம். |
Friday, 27 May 2011
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
| அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 மே 2011, 07:41.48 மு.ப GMT ] |
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம், வெற்றி பெற்ற நாள், பாரட்டுவிழா, பண்டிகைகள், விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான். அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூலம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது. இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணணியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து எல்லாம் சரியாக தேர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். |
அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்
| அன்பானவர்களுக்கு வாழ்த்து சொல்ல உதவும் இணையம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 மே 2011, 07:41.48 மு.ப GMT ] |
வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம், வெற்றி பெற்ற நாள், பாரட்டுவிழா, பண்டிகைகள், விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை அனிமேசனுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான். அந்த வகையில் நமக்கு அனிமேசன் மூலம் வாழ்த்துச்சொல்ல ஒரு தளம் உதவுகிறது. இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணணியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து எல்லாம் சரியாக தேர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம். இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். |
Tuesday, 24 May 2011
ஆஸ்துமா நோய்க்கு மிகச் சிறந்த மருந்து சூரிய ஒளி
| ஆஸ்துமா நோய்க்கு மிகச் சிறந்த மருந்து சூரிய ஒளி |
| [ திங்கட்கிழமை, 23 மே 2011, 03:28.25 பி.ப GMT ] |
சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமா(மூச்சுத்தடை) நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாக அமைகின்றதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உயிர்ச்சத்து டி பொதுவாக சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. வெலன்சியன் ஆய்வாளர்களினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சூரிய ஒளிக்கும் ஆஸ்துமா நோய்க்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் சூரிய ஒளி உடலில் பட்டால் புற்று நோயைக் கூட ஏற்படுத்தக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. எனினும் முற்று முழுதாக சூரிய ஒளியை நிராகரிப்பதும் ஆபத்துக்களை ஏற்படுத்தும். சூரிய ஒளியினால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சமநிலையாக பேணுவதே புத்திசாதூரியமானது என ஆஸ்துமா நோய் தொடர்பான முன்னணி ஆய்வாளர் அல்பர்ட்டோ அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார். மனித உடலுக்கு தேவையான 90 வீதமான உயிர்ச்சத்து டி சூரிய ஒளியின் மூலம் உடலுக்கு கிடைக்கப்பெறுகின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் உடலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவிலேயே காணப்படும். வடக்கு ஸ்பெய்ன் போன்ற குளிரான பிரதேசங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் ஆஸ்துமா நோயினால் அதிகம் அவதியுறுகின்றனர். ஸ்பெய்னின் முக்கியமான ஒன்பது நகரங்களில் 45,000 சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் ஆஸ்துமா தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடர்பான தரவுகள் சர்வசே பயோமெட்ரியல் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக காலநிலை மாற்றத்தை குறிப்பிடுகின்றனர். போதியளவு உயிர்ச்சத்து டி கிடைப்பதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது. ஆஸ்துமா, கசம் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உயிர்ச்சத்து டி மிகவும் இன்றியமையாதது என ஆய்வாளர் அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார். நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியை பெற்றுக் கொள்வது போதியளவு உயிர்ச்சத்து டி யைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் எனக் குறிப்பிட்டுள்ளார். குளிர்காலங்களில் சில நாடுகளில் போதியளவு சூரிய வெளிச்சம் கிடைக்காது. எனவே இவ்வாறானவர்கள் செயற்கை உயிர்ச்சத்து டி பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள |
Monday, 23 May 2011
கணணியிலிருந்து கோப்புக்களை ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு மாற்றுவதற்கு
| கணணியிலிருந்து கோப்புக்களை ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு மாற்றுவதற்கு |
| [ திங்கட்கிழமை, 23 மே 2011, 04:21.29 மு.ப GMT ] |
பெரும்பாலானவர்கள் iTunes என்னும் மென்பொருளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மென்பொருள் மூலமாக மட்டுமே ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு ஓடியோ மற்றும் வீடியோக்களை பரிமாற்றம் செய்ய முடியுமா என்றால் இல்லை. இவ்வாறு ஐபோன் மற்றும் ஐபொட்டிற்கு கணணியில் இருந்து தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள சந்தையில் நிறைய இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த வகையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள் தான் PC iPod என்னும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் கணணியிலிருந்து ஐபொட் மற்றும் ஐபோன்களுக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய ஐபோனையோ அல்லது ஐபொட்டினையோ கணணியுடன் இணைக்கவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் அந்த அப்ளிகேஷன் உங்கள் கணணியில் இணைக்கப்பட்டுள்ள ஐபொட் மற்றும் ஐபோனினை வரிசைப்படுத்தும். அதை தேர்வு செய்து கொண்டு பாடல் மற்றும் வீடியோவினை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை உங்களுடைய கணணியில் நிறுவ வேண்டுமெனில் .Net Framework 2.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணணியில் நிறுவியிருக்க வேண்டும். iTunes 8.0 அல்லது அதற்கு அடுத்த பதிப்புகள் கணணியில் நிறுவியிருக்க வேண்டும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் 7(32பிட், 62பிட்) ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். |
Sunday, 22 May 2011
பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு
| பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு |
| [ சனிக்கிழமை, 21 மே 2011, 01:37.11 பி.ப GMT ] |
ஆனால் பெரிய அளவுடைய கோப்புக்களை அனுப்ப மிக இலகுவான வசதி கொண்டதாக அமைகிறது wetransfer. இதன் மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும். இதற்கு இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக சேர வேண்டிய அவசியமில்லை. அத்துடன் இணைக்கப்படும் கோப்புக்களுடன் சிறிய தகவலையும் அனுப்பலாம். மிக எளிதான முறையில் அனுப்பும் வசதி கொண்டது. |
பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு
| பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு |
| [ சனிக்கிழமை, 21 மே 2011, 01:37.11 பி.ப GMT ] |
ஆனால் பெரிய அளவுடைய கோப்புக்களை அனுப்ப மிக இலகுவான வசதி கொண்டதாக அமைகிறது wetransfer. இதன் மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும். இதற்கு இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக சேர வேண்டிய அவசியமில்லை. அத்துடன் இணைக்கப்படும் கோப்புக்களுடன் சிறிய தகவலையும் அனுப்பலாம். மிக எளிதான முறையில் அனுப்பும் வசதி கொண்டது. |
| ஒரே மென்பொருளின் மூலம் 19 விதமான விளையாட்டுக்களை விளையாடுவதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 03:43.57 மு.ப GMT ] |
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுவார்கள். இந்த சின்ன மென்பொருளில் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 19 விளையாட்டுகள் உள்ளது. 11 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை கணணியில் நிறுவியதும் விளையாட்டுக்கள் பட்டியல் கொண்ட விண்டோ தோன்றும். அந்த விண்டோவில் தேவையானதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து விளையாடவும். |
| முகப்பு |
சொந்தமாக இணையதளம் அமைப்பதற்கு
| சொந்தமாக இணையதளம் அமைப்பதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 03:50.32 மு.ப GMT ] |
இதற்காக எந்தவொரு புரோகிராமிங்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். மற்றதை இந்த இணையதளம் பார்த்துக் கொள்கிறது. இணையத்தில் உலாவினால் மட்டும் போதுமா அதில் பங்கேற்க வேண்டாமா என்று கேட்கும் இந்த இணையதளம் நீங்களே சொந்தமாக இணையதளம் வடிவமைத்துக் கொள்ள உதவி செய்கிறது. சொந்தமாக இணையதளத்தை வடிவமைத்துக் கொள்ள தேவைப்படும் எந்த விதமான தொழில்நுட்ப சுமையும் இல்லாமலேயே சுலபமாக இணையதளத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. நீங்கள் விரும்பும் எந்த வகையான இணையதளத்தையும் வடிவமைத்துக் கொள்ள தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய சேவையை இது வழங்குகிறது. ஒரு சில கிளிக்குகளில் மிகச்சுலபமாக இணையதளத்தை வடிவமைத்து விடலாம் என்று இந்த தளம் உறுதி அளிப்பது போலவே மூன்றே கட்டங்களில் உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொண்டு விடலாம். மற்ற சேவைகளைப் போல விளம்பரங்களால் தளத்தை போட்டு நிரப்புவதில்லை என்று கூறுவதோடு விரும்பும் முகவரியை பயன்படுத்தும் வசதியையும் தருவதாக தெரிவிக்கிறது. |
Thursday, 19 May 2011
புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய
| புதிய வசதிகளுடன் கூடிய Internet Download Manager மென்பொருளை தரவிறக்கம் செய்ய |
| [ வியாழக்கிழமை, 19 மே 2011, 07:11.09 மு.ப GMT ] |
உலகில் அதிகமானவர்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். இந்த மென்பொருளை Download செய்தால் .rar file ஆக zip செய்யப்பட்டு வரும். அந்த கோப்பை விரிக்கும் போது ஒரு கடவுச்சொல் கேட்கும். அப்பொழுது நீங்கள் www.infotechportal.com என்று டைப் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த மென்பொருளுக்குரிய Serial Keyயும் தரப்பட்டிருக்கிறது. இம் மென்பொருளை தரவிறக்கிய பின் அந்த மென்பொருளின் Setup File ஐ Double Click செய்து Run பண்ணத் தொடங்கும் போது ஒரு Dialog Box வரும். இந்த Dialog Box இலே www.infotechportal.com எனும் கடவுச்சொல்லை டைப் செய்து இம் மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம். |
ஒளிப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைப்பதற்கு
| ஒளிப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைப்பதற்கு |
| [ வியாழக்கிழமை, 19 மே 2011, 04:13.41 மு.ப GMT ] |
1600x1200 போன்ற அளவுள்ள ஒளிப்படங்கள் கோப்பளவிலும் 1 Mb அல்லது 2 Mb என்று அதிகமாக இருக்கும். அதை நாம் யாருக்காவது பகிரும் போது அல்லது இணையத்தில் பதிவேற்றும் போது அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒளிப்படத்தின் அளவைக் குறைப்பது இணையத்திலோ அல்லது மின்னஞ்சல் அனுப்பும் போது உபயோகமாக இருக்கும். கணணியிலும் வன்தட்டின் இடம் மிச்சமாகும். நாம் ஒளிப்படத்தின் Resolutionஐக் குறைக்கும் போது கோப்பின் அளவும் Kb கணக்கில் குறைந்துவிடும். ஆனால் சில மென்பொருள்களின் மூலம் ஒளிப்படங்களின் அளவைக் குறைக்கும் போது அதன் தரமும் சேர்ந்து குறைந்து விடுவதை கண்கூடாக பார்க்கலாம். முக்கியமான விடயம் ஒளிப்படங்களுக்கு அதன் தெளிவே தவிர அளவல்ல. Image Converter என்ற மென்பொருள் அதன் அளவில் சிறியது. ஆனால் எளிமையான முறையில் ஒளிப்படங்களின் தரம் குறையாமல் அதன் அளவை அருமையாக குறைத்து விடுகிறது. இந்த மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. தரவிறக்கி விரித்து(Extracting) அதன் அப்ளிகேசன் கோப்பைக் கிளிக் செய்தாலே போதும். அதில் எந்த கோப்பறையில் உள்ள ஒளிப்படங்களை மாற்றப்போகிறீர்களோ அதை தேர்வு செய்து விட்டு எந்த கோப்பறையில் சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் Relative size அல்லது Absolute size என்பதை தீர்மானிக்கலாம். அதாவது 100 இல் எத்தனை சதவீதத்திற்கு மாற்றுவது என்பது Relative. அதுவே நாம் 800x600 சரியாக குறிப்பிடுவது Absolute ஆகும். அடுத்து எந்த வகையில் சேமிக்க வேண்டும்(JPEG, GIF, PNG, TIFF) என்பதை தேர்வு செய்த பின்னர் JPEG Quality 75 சதவீதம் வைத்துவிட்டு Process என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும். உங்கள் ஒளிப்படங்கள் தரம் குறையாமல் அதன் அளவு மட்டும் குறைந்து காணப்படும். |
கோப்புக்களை மாற்றம் செய்வதற்கு
| கோப்புக்களை மாற்றம் செய்வதற்கு |
| [ வியாழக்கிழமை, 19 மே 2011, 07:02.56 மு.ப GMT ] |
ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஓடியோ கோப்புக்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை மாற்றம் செய்ய வேண்டுமெனில் கணணியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக மாற்றம் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்க பெறாது. அவ்வாறான வேலையில் நாம் பாடல்களை மாற்றம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று உங்களுடைய பாடல் கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த போர்மட்டாக மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது மாற்றம் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். மேலும் ஒரு வசதி என்னவெனில் பாடலை நம்முடைய விருப்பபடி மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது. WAV, MP3, AAC, AIF, AU, FLAC, M4A, OGG, WMA, மற்றும் M4R போன்ற போர்மட்டுகளில் பாடல்களை மாற்றம் செய்து கொள்ள முடியும். பாடல்களை எளிமையான முறையில் மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். கைத்தொலைபேசிகளுக்கு ஏற்றவாறு பாடல்களை மாற்றம் செய்து கொள்ள இந்த தளம் மிகவும் உதவியாக இருக்கும். |
Tuesday, 17 May 2011
கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு
| கைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 17 மே 2011, 04:01.07 மு.ப GMT ] |
இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என இத்துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் இத்துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண போனிலிருந்து நவின ஸ்மார்ட் போன்களையே பலரும் விரும்புகின்றனர். இவைகளில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? இவர்களின் இணையதளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும். 1. Nokia OVI Store: இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் கைத்தொலைபேசிக்கு தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும். இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா கைத்தொலைபேசியில் இருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும். 2. Android Market: கூகுளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விடயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது. 3. Microsoft Windows Mobile OS: மைக்ரோசாப்டின் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணணியிலிருந்து தான் கைத்தொலைபேசியில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணணியில் நிறுவி கணணி வழியாக அமைப்புகளை மேற்கொள்ளலாம். 4. Apple Store: ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபொட் பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். |
இழந்த கோப்புகளை மீள் பெறுவதற்கு
|
Saturday, 14 May 2011
யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு
| யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 13 மே 2011, 05:19.59 மு.ப GMT ] |
படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம். வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader. இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம். Mp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது. பின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும். குரோம் உலவிக்கும் இந்த நீட்சி தரப்பட்டுள்ளது. |
| நோய்களை அறிய ஒரு தேடியந்திரம் |
| [ சனிக்கிழமை, 14 மே 2011, 04:36.01 மு.ப GMT ] |
கூகுளில் நோய் தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்து அலசி ஆராய்ந்து அதன் பின்னரே மருத்துவரிடம் செல்கின்றனர். இன்னும் சிலர் கூகுள் உதவியுடன் சுயவைத்தியம் பார்த்து கொள்வதும் உண்டு. சிலர் நோயை முழுமையாக புரிந்து கொள்ளவும் கூகுளில் தகவல்களை தேடுகின்றனர். இப்படி இணையத்தில் மருத்துவ தகவல்களை தேடுபவர்களின் வசதிக்காக என்றே புதிய தேடியந்திரம் அட்ரிசியா உதயமாகியுள்ளது. நோய் அறிவதற்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். அதாவது இந்த தேடியந்திரத்தில் நோய்க்கூறுகளை குறிப்பிட்டு தேடினால் அவற்றை குறிக்கும் நோய் என்ன என்பதை முடிவுகளாக பட்டியலிடுகிறது. எந்த நோய் தொடர்பான தகவல் தேவை என்றாலும் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தலாம். கூகுள் போலவே எளிமையாக உள்ளது இதன் முகப்பு. முதல் பக்க தேடல் கட்டத்தில் நோய்க்கூறுகளை டைப் செய்துவிட்டு காத்திருந்தால் போதும் நோய் என்ன நோய் என்று சொல்லி விடுகிறது. ஆனால் இது பட்டியலிடுவது சொந்த முடிவுகள் அல்ல. இரவல் முடிவுகள் தான். அதாவது முடிவுகளை பட்டியலிட இதற்கென்று தனி வழியோ அதற்கான தேடல் தொழில்நுட்பமோ கிடையாது. பல தேடியந்திரங்கள் கூகுளின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முடிவுகளை பட்டியலிட்டு தருவது உண்டு அல்லவா?அதே போல இந்த தேடியந்திரம் கூகுளின் பிரதான போட்டியாளரான மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை பயன்படுத்தி மருத்துவ தகவல்களை தேடி தருகிறது. அது மட்டும் அல்ல மருத்துவ தேடலில் ஈடுபடும் போது தொடர்புடைய நோய்க்கூறுகளையும் அருகே பட்டியலிட்டு காட்டுகிறது. அவற்றில் எந்த நோய்க்கூறுகள் எல்லாம் இருக்கிறதோ அவற்றை சேர்த்து கொள்ளலாம். இல்லாத நோய்க்கூறுகளை விலக்கி கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலை பாதித்துள்ள நோய் என்ன என்பதை சரியாக கண்டு கொள்ளலாம். அதே போல நோய்க்கூறுகள் தொடர்பான நோய்கள் பட்டியலும் இடம் பெறுகிறது. எந்த நோய் என்று தோன்றுகிறதோ அதனை கிளிக் செய்தால் அந்த நோய் தொடர்பான விவரங்களையும் சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். நோய்களுக்கான சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ள விரும்பினாலோ அல்லது நோய்கள் பற்றி மேலும் தகவல் அறிய விரும்பினாலே இந்த தேடியந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். |
| முகப்பு |
Wednesday, 11 May 2011
கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை
|
இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்
| இணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம் |
| [ புதன்கிழமை, 11 மே 2011, 03:53.12 மு.ப GMT ] |
இணையதளங்களை கிளிக் செய்வது என்றால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து வைத்து கொள்வது. இணைய மொழியில் இதற்கு ஸ்கிறீன்சொட் என்று பெயர். இப்படி இணையதளங்களை ஸ்கிறீன்சொட்டாக சேமித்து வைத்து கொள்வதில் பல்வேறு அணுகூலங்கள் இருக்கின்றன. நாம் பார்த்து ரசித்த பயனுள்ள தளங்களை குறித்து வைத்து கொள்ள இது சுலபமான வழி. அதே போல நாம் பயனுள்ளதாக நினைக்கும் தளங்களை நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் இதுவே சிறந்த வழி. எத்தனையோ பயன்கள் இருந்தாலும் இணையதளங்களை ஸ்கிறீன்சொட்டாக மாற்றி கொள்வது அத்தனை எளிதல்ல. அதற்கென பிரத்யேக வழிகளையும் குறுக்கு வழிகளையும் அறிந்திருக்க வேண்டும். வெப்சைட்ஸ் புரோ மற்றும் தம்லைசர் ஆகிய தளங்கள் இணையதள முகவரியை சமர்பித்தால் அவற்றை ஸ்கிறீன்சொட்டாக மாற்றித்தரும் சேவையை வழங்குகின்றன. இந்த வரிசையில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது டிவிஷாட் இணையதளம். டிவிஷாட் இனையதளங்களை கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. இதுவே டிவிஷாட்டை மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது. டிவிட்ஷாட்டை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. எந்த இணையதளத்தை ஸ்கிறீன்சொட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் தயாராகி விடும். இந்த தோற்றத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் அப்படியே நமது நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ளலாம். இணையதள தோற்றத்தை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்தும் கொள்ளலாம். இணையதளங்களை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்ல புதிய தளங்களை கண்டு கொள்ளவும் இந்த சேவை உதவுகிறது. அதாவது இந்த தளத்திம் மூலம் பகிரப்படும் தளங்களின் தோற்றம் டிவிட்டர் பதிவுகள் போலவே வரிசையாக தோன்றும். இந்த பதிவு தொடரை பார்ப்பதன் மூலம் மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தளங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். பயனாளிகள் வசதிக்காக பகிரப்படும் தளங்கள் தொழில்நுட்பம், வடிவமைப்பு என பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. எனவே புதிய தளங்களை தேடிபார்க்க விரும்புகிறவர்கள் இங்கு பகிரப்படும் ஸ்கிறீன்சொட்களை ஒரு வலம் வந்தால் போதுமானது. |
உங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு
| உங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு |
| [ புதன்கிழமை, 11 மே 2011, 07:10.24 மு.ப GMT ] |
கணணி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணணியின் சில அடிப்படை விடயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும். ஆகவே நம் கணணி பழுதானால் சர்வீஸ் இன்ஜினியர் என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிட்டு அவன் கேட்கிற தொகையை கொடுத்துடுவோம். அவனும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு பொய் சொல்லி காசை கறந்து விடுவான். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணணியை பற்றி சில அடிப்படை விடயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு சூப்பர் இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணணியின் அனைத்து விவரங்களும் வரும். இந்த மென்பொருளினால் கணணியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML கோப்புகளாக உங்கள் கணணியில் சேமித்து கொள்ளலாம். பிரிண்ட் எடுத்தல், மின்னஞ்சல் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவாமல் நேரடியாக இயக்கலாம். இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும். |
Sunday, 8 May 2011
ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி: 25000 முகவரிகள் வரை சேமிக்க
| ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி: 25000 முகவரிகள் வரை சேமிக்க |
| [ ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011, 07:41.40 மு.ப GMT ] |
இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது. தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவை தற்போது உயர்த்தி 25000 முகவரிகளை சேமித்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கூடுதலாக இன்னொரு வசதியும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முன்பு ஒரு தனி முகவரியின் அளவு 32KB தான் இருக்க வேண்டும். இது பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இந்த அளவு போதவில்லை. இதை கருத்தில் கொண்டு ஒரு தனி முகவரியின் அளவை 128KB அளவாக உயர்த்தி உள்ளது. ஆகவே அனைவரும் ஜிமெயிலின் இந்த அறிய வசதிகளை அறிந்து பயன்படுத்தி கொள்ளுங்கள் |
உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
| உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற |
| [ திங்கட்கிழமை, 09 மே 2011, 04:09.29 மு.ப GMT ] |
நம்முடைய பழைய கணணி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணணியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணணியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணணிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம். கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணணியில் உள்ள அனைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணணிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது. இது முற்றிலும் PickMeApp ஒரு இலவச மென்பொருள் இருந்தாலும் தாங்கள் இந்த தளத்தில் உறுப்பினர் ஆகினால் மட்டுமே இந்த மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்ய முடியும். இந்த முறையில் நீங்கள் உங்கள் மென்பொருளை புதிய கணணியில் மாற்றும் போது நாம் செய்து வைத்திருந்த செட்டிங்க்ஸ் கூட மாறாமல் வரும் என்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சம். இந்த மென்பொருளை நிறுவச் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் புதிய கணணிக்கு மாற்ற வேண்டிய மென்பொருட்களை தேர்வு செய்து கொண்டு அதன் ரெஜிஸ்டரியை அப்படியே புதிய கணணியில் நிறுவினால் அந்த மென்பொருள் உங்களின் புதிய கணணியில் வந்து விடும். |
| முகப்பு |
இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு
| இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு |
| [ திங்கட்கிழமை, 09 மே 2011, 04:00.32 மு.ப GMT ] |
இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும். இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும். மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால்http://tools.google.com/gears/ சென்று நிறுவிக் கொள்ளவும். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும். இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும். இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம். |
Saturday, 7 May 2011
ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க2
| ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011, 04:39.49 மு.ப GMT ] | ||
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஓன்லைன் மூலம் இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம். இங்கு 5GB அளவுடைய கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம். அதற்கு மேற்பட்டதாயின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைய சேமிப்பு தளமானது IPHONE, ANDROID தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
உங்களின் MP3 வடிவிலான பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்டு ரசிப்பதற்கு WWW.MOUGG.COM உதவுகிறது. இந்த தளத்தில் பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்க முடியும். இங்கு இலவசமாக 1GB அளவுடைய பாடல்களை சேமிக்க முடியும். மேலதிகமாக சேமித்து வைக்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தளத்துக்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால் இங்குள்ள UPLOAD என்பதை கிளிக் செய்து பாடல்களை சேமிக்க முடியும். இந்த தளமும் APPLE, ANDROID அப்பிளிகேசன் மூலம் தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பாடல்களை பதிவு செய்து கேட்க முடியும்.
|
ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க
| ஓன்லைனில் கோப்புகளை சேமிக்க |
| [ ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011, 04:39.49 மு.ப GMT ] |
இந்த தளத்தில் உங்களின் கோப்புக்களை ஓன்லைன் மூலம் இலவசமாக சேமித்து வைக்கலாம். இந்த தளத்தில் சென்று உங்களை பதிவு செய்து கொண்டு சேமித்து வைக்கலாம். இங்கு 5GB அளவுடைய கோப்புக்களை இலவசமாக சேமிக்கலாம். அதற்கு மேற்பட்டதாயின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இணைய சேமிப்பு தளமானது IPHONE, ANDROID தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். உங்களின் MP3 வடிவிலான பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்டு ரசிப்பதற்கு WWW.MOUGG.COM உதவுகிறது. இந்த தளத்தில் பாடல்களை சேமித்து பின்னர் அந்த தளத்திலே கேட்க முடியும். இங்கு இலவசமாக 1GB அளவுடைய பாடல்களை சேமிக்க முடியும். மேலதிகமாக சேமித்து வைக்க கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தளத்துக்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டால் இங்குள்ள UPLOAD என்பதை கிளிக் செய்து பாடல்களை சேமிக்க முடியும். இந்த தளமும் APPLE, ANDROID அப்பிளிகேசன் மூலம் தொலைபேசிகளில் மென்பொருளாக தரவிறக்கம் செய்து பாடல்களை பதிவு செய்து கேட்க முடியும். |
Friday, 6 May 2011
உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க
| உங்களது ஆங்கில வார்த்தையின் திறனை வளர்க்க |
| [ சனிக்கிழமை, 07 மே 2011, 03:47.39 மு.ப GMT ] |
ஒரு ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் தெரிவித்து அதைப்பற்றிய சிறு குறிப்பையும் கொடுத்து அது பெயர்ச்சொல்லா அல்லது வினைச்சொல்லா என்பதையும் தெரிவித்து அது எந்த வார்த்தை என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இப்படி நமக்கு ஆங்கில சொற்களின் அறிவை வளர்க்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று Click here to Start என்பதை சொடுக்கி சவாலுக்கு தயாராகலாம். முதல் எழுத்தை வைத்து வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதற்கான கால அளவு 1 நிமிடம் தான் அதற்குள் கொடுக்கப்பட்டிருக்கும். எழுத்திற்கு சரியான வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும். நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தை சரியாக இருக்கும் பட்சத்தில் நமக்கு Score என்பதில் நமக்கு மதிப்பெண் கிடைக்கும். நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம் மதிப்பெண்ணை சேமித்தும் வைக்கலாம். ஒரு வார்த்தை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாம் Skip என்ற பொத்தானை சொடுக்கி அடுத்த வார்த்தைக்கான முதல் எழுத்தை பார்க்கலாம். பொழுதுபோக்கு நேரத்தில் இது போன்ற பயனுள்ள விளையாட்டின் மூலம் நம் ஆங்கில சொற்களஞ்சியத்தின் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். |
கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற
| கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற |
| [ சனிக்கிழமை, 07 மே 2011, 04:03.12 மு.ப GMT ] |
உங்கள் கணணியில் உள்ள மதர்போர்டு, மெமரி, மற்றும் கணணி பற்றிய அனைத்து தகவல்களும் உடனடியாக ஒரே விண்டோவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மென்பொருளின் பெயர் CPU-Z என்பதாகும். இதன் அளவு மிக குறைந்த அளவு தான். இதை உங்கள் கணணியில் தரவிறக்கி கொண்டால் போதும். அதன் பின் அதை ரன் செய்தால் அதில் உங்கள் கணணியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து விடும். உங்கள் CPU- வை பற்றி தெரிவிக்கும். உங்கள் கணினியின் cache மெமரியின் அளவை காண்பிக்கும். அதுமட்டுமில்லாமல் மதர்போர்டு, ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் பற்றிய அனைத்து அளவுகளையும் இது உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறது. |
பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றம் செய்ய
| பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றம் செய்ய |
| [ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 07:21.19 மு.ப GMT ] |
இந்த பவர்பாயின்டில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்கி அதை மொத்தமாக ஓடவிட்டு பார்க்கும் போது அழகாக இருக்கும். இப்படி உருவாக்கும் பவர்பாய்ன்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற ஒரு வழி உள்ளது. வீடியோவாக மாற்றினால் அந்த கோப்பை சீடியில் கொப்பி செய்து டிவியில் பார்க்கலாம். நம்முடைய மொபைல் போன்களில் பார்த்து மகிழலாம். யூடுப் போன்ற வீடியோ தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அந்த கோப்பை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவியதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். 1. முதலில் New Task என்ற பட்டன் மீது க்ளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள Add file(s) என்பதை க்ளிக் செய்யவும். 2. Add File(s) க்ளிக் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வீடியோவாக மாற்றம் செய்ய விரும்பும் பவர்பாய்ன்ட் கோப்புகளை தேர்வு செய்யவும். (இதில் பல பைல்களை தேர்வு செய்து ஒரே வீடியோவாகவும் உருவாக்கி கொள்ளலாம்). 3. நீங்கள் கோப்பை தேர்வு செய்ததும் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் நீங்கள் மாற்ற விரும்பும் வீடியோ வகையை(Format) தேர்வு செய்யவும். 4. குறிப்பிட்ட போர்மட் தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் Convert என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இந்த பட்டனை அழுத்துவதற்கு முன் உங்கள் கணணியில் செயலில் வேறு ஏதேனும் மென்பொருள் இயங்கி கொண்டிருந்தால் அனைத்தையும் க்ளோஸ் செய்து விடவும். 5. அந்த Convert பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் எச்சரிக்கை செய்தி விண்டோவை OK கொடுத்தால் பவர்பாய்ன்ட் கோப்புகள் வீடியோவாக மாறத் தொடங்கும். மாற்றம் ஆகி முடிந்ததும் உங்களுக்கு அந்த வீடியோ கோப்புகள் ஓபன் ஆகும். அந்த வீடியோ கோப்பை இனி உங்களுக்கு தேவையான இடத்தில் உபயோகித்து கொள்ளலாம். |
தனித்தனி வீடியோக்களை எந்த மென்பொருளின் துணையும் இல்லாமல் ஒன்றிணைக்க
| தனித்தனி வீடியோக்களை எந்த மென்பொருளின் துணையும் இல்லாமல் ஒன்றிணைக்க |
| [ வெள்ளிக்கிழமை, 06 மே 2011, 07:09.38 மு.ப GMT ] |
குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய கோப்புகள் சிறு சிறு பகுதிகளாக இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட கோப்புகளாக இருக்கலாம். தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் இணைக்கலாம். 1. உதாரணமாக நம் கணணி வன்தட்டின் D: ல் test என்ற கோப்பறையில் part1.mpg, part2.mpg என்ற இரண்டு கோப்புகள் உள்ளதாக கொள்வோம். அவற்றின் மேல் வலது கிளிக் செய்து அதன் பெயரை a என்றும் மற்றதை b என்றும் பெயர் மாற்றிக் கொள்வோம். (அதன் முடிவு(extension) இல்லாமல் பெயர் மாற்றம் செய்யவும்.) அல்லது காமண்ட் பிராம்ப்டில் ren part1.mpg a, ren part1.mpg b என்று தரவும். 2. கணணியின் காமண்ட் பிராம்ப்டினை திறந்து கொள்ளவும். start->run->"cmd" or "command" அல்லது winkey+r பிறகு cmd அல்லது command என்று டைப் செய்யவும். 3. இணைக்க வேண்டிய வீடியோக்கள் இருக்கும் கோப்பறைக்கு செல்லவும். உதாரண்மாக cd d:/test (cd -change directory) 4. இப்போது தான் முக்கியமான பகுதி. copy /b a + b final.mpg என்று டைப் செய்து எண்டர் தரவும். இப்பொது 1 files copied என்று தெரியும் வரை காத்திருக்கவும். இப்போது கமாண்ட் பிராம்ப்ட்டை மூட exit என்று தரவும். அவ்வளவு தான். final.mpg என்ற வீடியோவில் இரண்டு வீடியோக்களும் சேர்ந்து அடுத்தடுத்து பிளே ஆகும். மேலே உள்ளபடி வீடியோக்களை இணைப்பதில் எதேனும் உங்களுக்கு அசௌகரியம் இருந்தால் இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் பெயர் Easy Video Joiner. இது முற்றிலும் இலவசமான மற்றும் எளிய மென்பொருள். இதனை கொண்டு AVI, MPEG (MPG), RM (Real Media) or WMV/ASF (Window Media) போன்ற பல உருவில் இருக்கும் வீடியோக்களை ஒரு பெரிய வீடியோ கோப்பாக மாற்றி வரிசையாக எந்தவித இடையூரும் இன்றி காணலாம். எளிமையாக வீடியோக்களின் வரிசையையும் மாற்றிக் கொள்ளலாம். |
Subscribe to:
Comments (Atom)