Thursday 27 October 2011

நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்


நண்பர்களை இணைக்கும் பயனுள்ள இணையம்
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 07:30.16 மு.ப GMT ]
ஒரு கல்லூரியில் அல்லது ஒரே ஊரில் உள்ள நண்பர்கள் வெளியூரில் இருக்கும் போது அனைவரையும் ஓன்லைன் மூலம் ஒன்று சேர்ப்பதற்கு உதவி புரிகிறது Faster Plan என்ற தளம்.
என்ன தான் திட்டமிட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட தினத்தில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திருமணத்திற்கு கூட செல்ல முடியாமல் இருக்கிறது.
இப்படி இருக்கும் நண்பர்களின் கூட்டத்திற்கு திட்டமிடுதலைப் பற்றியும் திட்டங்களை எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பற்றியும் சொல்லி கொடுக்கிறது ஒரு தளம்.
நண்பர்களை சந்திக்கலாம் அதுவும் வெகு விரைவில் சாத்தியமே இல்லை என்கிறீர்களா, சாத்தியம் இல்லாததை கூட திட்டமிட்டால் சாத்தியமாக்கலாம் என்கிறது இத்தளம்.
இத்தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கி நம் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து நாமும் நண்பர்களுடன் சேர திட்டமிட ஆரம்பிக்கலாம்.
எப்படி என்றால் Find a Common Date என்பதை சொடுக்கி என்றைய தினத்தில் நம் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என்று எளிதாக அறியலாம், நாமும் அன்றைய தினத்தில் மற்ற வேலைகள் இல்லாது பார்த்துக் கொள்ளலாம்.
Add participant என்பதை சொடுக்கி நம் நண்பர்களையும் இந்த Faster Plan-ல் சேர்த்துக் கொள்ளலாம். யார் எப்போது என்ன இத்தளத்தில் பகிர்ந்து கொண்டாலும் அனைத்து நண்பர்களுக்கும் தகவலை உடனுக்கூடன் கொண்டு சேர்க்கும்.

Wednesday 19 October 2011

Simpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு


Simpper Video Mail: வீடியோ மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 01:16.56 பி.ப GMT ]
சில மவுஸ் கிளிக்குகளில் வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு உதவுகிறது Simpper Video Mail.
அத்துடன் பேஸ்புக் நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணணியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது.
வீடியோ ரெக்காடிங்க் செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த டூல் மூலம் வீடியோவை ரெக்காட் செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். அடோபியில் ஏர் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குகிறது இந்த மென்பொருள்.
நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில் கம்பிரஸ் செய்துவிடுகிறது.

Monday 10 October 2011


ஒரே சமயத்தில் ஜந்துமொழிகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு
[ திங்கட்கிழமை, 10 ஒக்ரோபர் 2011, 08:36.53 மு.ப GMT ]
ஒரே சமயத்தில் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்களை அறியலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
இதனை உங்கள் கணணியில் நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.
அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.
தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.
http://www.4shared.com/file/QBxsZ1mr/translator.html

Saturday 1 October 2011

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஒக்ரோபர் 2011, 04:33.25 மு.ப GMT ]
குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.
ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.