Sunday 28 August 2011

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த


ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:43.36 மு.ப GMT ]
நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஓன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம், இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
ஓன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.
இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதாக ஒரே சொடுக்கில் செய்யலாம்.
கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.
புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம். நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஓன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம்.
http://ipiccy.com/editor

Friday 26 August 2011


எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் அனிமேசன் படங்களை உருவாக்குவதற்கு
[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:38.36 மு.ப GMT ]
நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி எளிதாக நாமே அனிமேசன் உருவாக்கலாம்.
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஓன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஓடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஓன்லைன் மூலம் செய்யலாம்.
எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். வீடியோ அல்லது ஓடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள் உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு திறமையான கார்டூன் வடிவமைப்பாளர் உருவாக்குவது போல் எப்படி உருவாக்கலாம் என்பதையும் அழகுடன் காட்டுகின்றனர்.
http://www.creazaeducation.com/

Thursday 25 August 2011

உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு


உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு
[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 04:43.11 மு.ப GMT ]
உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கல்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது.
உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான்.
ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான்.
வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
http://www.yatedo.com/

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு


யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 25 ஓகஸ்ட் 2011, 04:55.20 மு.ப GMT ]
இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன.
ஆனால் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல போர்மட்டுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மென்பொருளின் பயன்கள்:
1. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
3. தொடர்பு வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.
4. வீடியோக்களை வேகமாக தரவிறக்கம் செய்கிறது.
5. வீடியோக்களை FLV, MP4 போர்மட்களில் பல்வேறு அளவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
6. வீடியோக்களை Preview பார்க்கும் வசதி இருப்பதால் வீடியோ நன்றாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. யூடியுப் வீடியோக்களில் இருந்து ஓடியோவை மட்டும் தனியே பிரிக்க Extract FLV audio வசதி.
8. மேலும் History, Batch போன்ற கூடுதல் வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அடுத்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
மென்பொருளில் Youtube URL இடத்தில் வீடியோவின் URL கொடுக்கவும். அதன் பின் வீடியோ தரவிறக்கம் செய்ய வேண்டிய தரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட வீடியோ HD வடிவில் இருந்தால் மட்டுமே HD வடிவில் தரவிறக்கம் செய்ய முடியும் இல்லையேல் சாதரணமாக தான் தரவிறக்கம் ஆகும். அடுத்து Preview பார்க்க வேண்டுமென்றால் பார்த்து கொண்டு கடைசியில் தரவிறக்க பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் அந்த வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.
வலது புறத்தில் பார்த்தல் இந்த வீடியோவின் Related videos காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கம் செய்ய நினைத்தால் அதன் மீது கிளிக் செய்தாலே போதும். அந்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் பொழுது தரவிறக்கத்தின் வேகம் இணைய வேகத்திற்கு ஏற்ப குறையும்.

Monday 8 August 2011

வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு


வீடியோ ஸ்கிறீன்சேவரை உருவாக்குவதற்கு
[ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 06:59.37 மு.ப GMT ]
விதவிதமான வீடியோ ஸ்கிறீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிறீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும்.
நமக்கு விருப்பமான படங்கள், திரைப்பட பாடல்கள் என நமது கணணி ஓய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒலித்தால் அருமையாக இருக்கும் அல்லவா?
அதற்கு இந்த சின்ன மென்பொருள் நமக்கு உதவி புரிகின்றது. இந்த மென்பொருளில் பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf கோப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற மென்பொருள் இருக்க வேண்டும்.
இப்பொழுது உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த மென்பொருள் மூலம் .SWF கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற மென்பொருள் தேவை. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் Add Files மூலம் தேவையான வீடியோ கோப்பை தேர்வு செய்யுங்கள். வீடியோ ஸ்கிரீனை தேவையான அளவிற்கு செட் செய்யுங்கள். உங்களது வீடியோ அளவானது ஸ்கிரீனைவிட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக் கொள்ளலாம்.
இனி அதில் உள்ள Creator கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இந்த ஸ்கிறீன்சேவருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம். இப்போது டெக்ஸ்டொப்பிற்கு வந்து காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.
டிஸ்பிளே ப்ராபர்டிஸ் தேர்வு செய்து அதில் ஸ்கிறீன்சேவர் டேபினை கிளிக் செய்யுங்கள். வரும் விண்டோவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து அப்ளை-ஓ.கே.கொடுங்கள்.
அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய பாடல் ஸ்கிறீன்சேவராக ஓட ஆரம்பிக்கும். இதனுடைய மூல கோப்பை நீங்கள் விரும்பிய நபருக்கும் கொடுக்க

உங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு


உங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு
[ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 04:31.14 மு.ப GMT ]
எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து இருக்கிறீர்களா? பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா?
ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க கூடாது? ஓடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக நேர்ந்திருக்கிறது ஸ்பிரிக்கர்.
உலகோடு பேசுங்கள் என அழைக்கும் இந்த இணையதளம் உங்களுக்கான இணைய வானொலியை நடத்தி கொள்ள வழி செய்கிற‌து. அதிலும் எப்படி, இதோ இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக உங்கள் வானொலி சேவையை துவக்கி விடலாம்.
ஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிற‌து என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம்.
நேரடி ஒலிபரப்பு என்பார்களே அதே போல நீங்கள் பேச பேச நிகழ்ச்சி உங்கள் வானொலியில் ஒலிபர‌ப்பாகும். இல்லை என்றால் அழகாக திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சியை தயார் செய்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம். பதிவு செய்யவும் சிறப்பு சப்தங்களை சேர்க்கவும் வசதி உள்ளது.
நீங்கள் கேட்டு ரசித்த பாடல்கள், நாட்டு நடப்புகள் மீதான விமர்சனம், கிரிக்கட் வர்ணனை என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
வானொலி நடத்தும் அளவுக்கு குரல் வளம் எல்லாம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்கள் வானொலியை கேட்டு பாருங்கள். உருவாக்கி வைத்திருக்கும் விதவிதமான வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ர‌சிக்கலாம். நிறுவனங்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான வானொலி நிகழ்ச்சிகளை விட இவை மாறுபட்டதாக இருக்கும்.
உறுப்பினர்களின் நிகழ்ச்சிகள் அவற்றின் வகைகளுக்கேற்ப தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து கேட்கலாம்.
சொந்தமாக வானொலியை நடத்துபவர்கள் தங்களுக்கான நேயர்களை தேடி கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிற‌து. வானொலியை உருவாக்கிய பிறகு அதனை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல் நிகழ்ச்சியின் வகைகளை அதற்கேற்ற சொற்கள் மூலம் வகைப்படுத்தலாம்.
வானொலியை நடத்துபவர்களுக்கான தனி பக்கமும் தரப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம். இணையம் ஏற்படுத்தி தந்துள்ள எல்லையில்லா வாய்ப்பின் அடையாளமாக இணையவாசிகள் தங்களுக்கான வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவுகிற‌து இந்த தளம்.

Tuesday 2 August 2011

3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு


3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 07:29.53 மு.ப GMT ]
கூகுள் இணையதளத்தில் சென்று படம் தேடும் நபர்களுக்கு ஒரு அழகான மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இனி குரோம் உலாவியில் கூகுள் படங்களை 3D-ல் அழகாக பார்க்கலாம்.
Google Images-ல் சென்று படங்களை தேடுபவர்கள் சில படங்களை சொடுக்கி அடுத்து வரும் திரையில் தான் அந்த படங்களை முழுமையாக பார்க்க முடியும் என்று இல்லாமல் ஒரே திரையில் கூகுள் இமெஜில் நாம் தேடும் அத்தனை படங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் 3Dல் காட்டுகின்றனர்.
நமக்கு உதவுவதற்காக உள்ள குரோம் உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. கூகுள் குரோம் உலாவியில் இருந்து கொண்டு கீழ் இருக்கும் முகவரியை சொடுக்கி வரும் திரையில் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நிறுவலாம்.
நிறுவி முடித்ததும் குரோம் உலாவியின் டூல் பாரில் புதிதாக ஒரு ஐகான் தோன்றும். அதை சொடுக்கி Launch cooliris என்று மற்றும் ஒரு இணையப்பக்கம் திறக்கும். அங்கு நடுப்பக்கத்தில் இருக்கும் கூகுள் தேடல் கட்டத்திற்குள் நாம் தேடவிருக்கும் படங்களின் பெயர்களை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கவும்.
ஒரு சில நிமிடங்களில் நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் அத்தனை படங்களும் 3D-ல் வந்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கும். கூடவே அந்தப்படங்களை சொடுக்கி அங்கிருந்தே பெரிதாக பார்க்கலாம்.
படங்கள் அல்லாத வெளியே சொடுக்கி எளிதாக அடுத்தப் படத்தை பார்க்கலாம். மவுஸில் இருக்கும் Scroll bar பயன்படுத்தி Zoom in, Zoom out செய்தும் பார்க்கலாம்.
தொழில்நுட்ப புதுமை விரும்பிகளுக்கும், கூகுளில் படங்களைத் தேடி ஒவ்வொரு பக்கமாக செல்லும் நபர்களுக்கும் பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நீட்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Monday 1 August 2011

வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு


வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு
[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 08:33.46 மு.ப GMT ]
வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம்.
சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம்.
இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.
அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்.
அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும்.
பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்ப