Wednesday 27 July 2011

உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கு


உங்களது புகைப்படங்களை அழகான வீடியோ தொகுப்பாக மாற்றுவதற்கு
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 04:25.55 மு.ப GMT ]
உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளவும் அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும்.
இத்தகைய வசதிகளை நீங்கள் எந்தவொரு மென்பொருளும் இன்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும். இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ கட்சிகளை UPLOAD செய்யவும்.
மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்கலாம்.
பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
http://www.stupeflix.com/

மனிதர்களுக்கு மட்டுமே மூளையின் அளவு குறைந்து விடுகிறது



  
 
ஆராய்சி செய்தி
மனிதர்களுக்கு மட்டுமே மூளையின் அளவு குறைந்து விடுகிறது
[ புதன்கிழமை, 27 யூலை 2011, 02:57.40 பி.ப GMT ]
விலங்கினங்களை காட்டிலும் மனிதர்கள் வயோதி கால நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
மனிதர்களின் ஆயுட்காலம் சிம்பன்சிகளை விட கூடுதலாக இருப்பதால் வயோதிக நோய் தாக்கமும் கூடுதலாக உள்ளது. வயோதிக காலத்தில் மூளை எடை குறைந்து விடுகிறது. 80 வயதில் மூளையின் உண்மையான எடை அளவில் 15 சதவீதம் குறைந்து விடுகிறது.
மூளை சுருக்கம் காரணமாக வயோதிக காலத்தில் அல்சீமர் என்ற மறதி நோய்கள் ஏற்படுகின்றன. மூளை சுருங்குவதால் உடலின் இதர உறுப்புகளும் தங்களது திறனை படிப்படியாக இழக்கின்றன.
மூளைச் சுருக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை வயோதிகம் சார்ந்த பல்கலைகழக ஆய்வாளர்களால் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை.
வயோதிக கால மூளை சுருங்குதல் பற்றி வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழக வயோதிக ஆய்வு துறை தலைவர் செட் ஷெரீவுட் கூறுகையில்,"சிம்பன்சி குரங்கு மூளையைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. நியூரான்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதில்லை. எனவே வயோதிக காலத்தில் பிரச்சனை ஏற்படுகிறது" என்றார்.
மூளை சுருங்குதல் பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Monday 25 July 2011

கற்றாழையின் மருத்துவ குணங்கள்


கற்றாழையின் மருத்துவ குணங்கள்
[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 03:32.23 பி.ப GMT ]
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோற்றுக் கற்றாழை மடல்களப் பிளந்த நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல் தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.
கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால் கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
கூந்தல் வளர: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்தால் சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.
இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்: கண்களில் அடிபட்டாலோ இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து ஒரு துணியில் முடிச்சுக் கட்டி தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக் கொண்டு இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால் கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு: மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை எடுத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும்.
இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் எண்ணெய் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்: தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி மருத்துவர் கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோல் பளபளக்க: கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.
கற்றாழையை தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
கண்நோய்: கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
தோல் இறுக்கத்திற்கு:  கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

உங்களுக்கு தேவையான போர்மட்டில் வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கு


உங்களுக்கு தேவையான போர்மட்டில் வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 04:29.07 மு.ப GMT ]
இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய போர்மட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை.
FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய போர்மட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.
இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது. WebVideoFetcher என்ற இந்த இணையதளம் கூகுள், பேஸ்புக், யூடியுப்(Google, youtube, facebook) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது.
நீங்கள் ஏதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை கொப்பி செய்து இந்த தளத்தில் இட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.
இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.
ஓடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப(Download size) பெற முடியும்.
இந்த இணையதளத்தின் சேவையைப் பயன்படுத்த உங்கள் கணணியில் ஜாவா வசதி அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
http://www.webvideofetcher.com/

Sunday 24 July 2011

வீடியோக்களை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் மாற்றுவதற்கு


வீடியோக்களை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் மாற்றுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூலை 2011, 08:01.09 மு.ப GMT ]
நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது.
வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும். அந்த வகையில் இந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும்.
இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான்.
பலவிதமான நுணுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது. ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது.
வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.
http://www.lightworksbeta.com/

Thursday 21 July 2011

கணணி பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு


கணணி பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 04:27.30 மு.ப GMT ]
கணணியை பயன்படுத்தும் அனைவருக்கும் கணணியை பற்றிய முழுமையான தகவல்கள் அனைத்தும் தெரிந்திடாது.
ஒரு சிலருக்கு தன்னுடைய கணணியில் என்னென்ன வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்கள் இருக்கின்றன என்று தெரியாது.
ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணணியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணணியில் என்னென்ன இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம்.
இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணணியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன.
அதன்படி கணணியில் என்னென்ன வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணணியின் விவரங்களை காண முடியும்.

கூகுளின் அழகிய எழுத்துருக்களை கணணியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த


கூகுளின் அழகிய எழுத்துருக்களை கணணியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த
[ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 04:43.17 மு.ப GMT ]
இணையத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு வகையில் கூகுளின் சேவை நமக்கு பயனளிக்கிறது.
எழுத்துரு என்பது கணணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதன் மூலமாக தான் நம்முடைய கணணியில் தகவல்களை பதிய முடியும் மற்றும் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் வடிவமைப்பு செய்ய பல வகையான எழுத்துருக்கள் இருந்தால் தான் நன்றாக வடிவமைக்க முடியும்.
கூகுள் 199 புதுவகையான எழுத்துருக்களை நமக்கு வழங்குகிறது. அந்த எழுத்துருக்களை எவ்வாறு நம் கணணியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
கூகுள் இணைய எழுத்துருக்களுக்கு என்று ஒரு தனி தளத்தை உருவாக்கி சேவையை வழங்குகிறது.
இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Google Fonts கிளிக் செய்யுங்கள். இந்த தளத்தில் 199 அழகிய எழுத்துருக்கள் உள்ளது. அவைகளில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள அந்த எழுதுருக்கு அருகில் உள்ள Add to Collections என்பதை கிளிக் செய்தால் அந்த எழுத்துரு உங்கள் பட்டியலில் சேர்ந்து விடும்.
உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தேர்வு செய்து கொண்டவுடன் மேலே உள்ள Download your Collections என்ற லிங்கை அழுத்தினால் போதும். நீங்கள் தேர்வு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் கணணியில் தரவிறக்கம் ஆகும்.
உங்களுக்கு கிடைத்த .zip கோப்பை extract செய்து கணணியில் நிறுவி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Tuesday 19 July 2011

கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்

கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்
[ புதன்கிழமை, 20 யூலை 2011, 04:24.37 மு.ப GMT ]
பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன.
இதற்கான ஆதாரமாக www.socl.com என்ற இணைய முகவரி வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இச்சமூக வலையமைப்பின் பெயர் "டுலாலிப்" ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அப்பக்கத்தில் "With Tulaip you can find what you need and share what you know easier than ever" எனக்குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.
இதேவேளை இப்பக்கம் அத்தளத்திலிருந்து பின்னர் அகற்றப்பட்டுள்ளதுடன் வேறொரு பக்கம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது மைக்ரோசொப்டின் சமூகவலையமைப்பு என்பதினை உறுதி செய்யும் பல ஆதாரங்கள் உள்ளதாக இணையத்தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதாவது இதன் பெயர் "Tulalip" என்பது அமெரிக்க வொசிங்டனின் ரெட்மொண்ட் நகரின் பூர்வீகக் பழங்குடியினரைக் குறிக்கும் பெயர் எனவும் இங்கேயே மைக்ரோசொப்ட்டின் தலைமையகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசொப்டின் தேடல் பொறியான bing நான்கு எழுத்துக்களை கொண்டதுடன் தற்போது அது socl.com தளமும் 4 எழுத்துக்களை கொண்டதாகும்.
சமூக வலையமைப்புகளுக்கிடையிலான போட்டியில் பேஸ்புக் ஏற்கனவே ஜாம்பவானாக உள்ள நிலையில் கூகுள் தனது கூகுள் + ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைக்ரோசொப்டின் இரகசிய முயற்சியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday 16 July 2011

கூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்

கூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூலை 2011, 04:36.37 மு.ப GMT ]
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமைப்பான கூகிள் பிளஸில் உள்ளவர்களை தேடிப்பிடிப்பதற்கு ஒரு தேடு பொறி உதவி செய்கிறது.
இந்த இணையத்தளம் மூலம் கூகுள் பிளஸில் இணைந்திருப்போரை Name, Profession, Location, Followers, Following, Gender, Relationship போன்ற தரவுகளின் அடிப்படையில் தேடிப்பிடித்துவிடலாம் என்கின்றனர்.
இந்த தளத்தின் மூலம் நிச்சயமாக உலகின் சுவாரசியமான நபர்களின் கூகிள் பிளஸ் சுயவிவரத்தை கண்டுபிடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

Friday 15 July 2011

உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு

உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 04:39.42 மு.ப GMT ]
இணையத்தில் எவ்வளவு தான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
இத்தகைய ஆபாச தளங்களை உங்கள் கணணியில் தடுக்கலாம். மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணணியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும்.
இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
படத்தில் காட்டப்பட்ட இலக்கத்தினை படத்தில் உள்ளது போல் பதிவு செய்து OK பட்டன் கிளிக் செய்யவும்.
இப்போது ஆபாச தளங்களை திறந்தால் கீழே உள்ளது போல் தோன்றும்.
இந்த செயல் முறை விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும். விண்டோஸ் ஏனைய பதிப்புகள், மாக் லினக்ஸ் மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றில் ஆபாச தளங்களை தடுக்க கீழே உள்ள தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினை கொடுத்து தளத்தின் உள்ளே சென்று பெறலாம்.

வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்டுகளில் பதிவிறக்கம் செய்வதற்கு

வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்டுகளில் பதிவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 15 யூலை 2011, 04:27.48 மு.ப GMT ]
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடிச்செல்வது யூடியூப் தளம் ஆகும்.
ஆனால் இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளையோ அல்லது நீட்சிகளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் சாதாரணமாக ஓன்லைனில் இருந்து நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இதற்கு Clip.Dj என்னும் தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் எந்தவித மூன்றாம்தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் நேரடியாகவே வீடியோவினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பின் சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வீடியோவிற்கான குறிச்சொல்லை இட்டு தேடவும். பின் விருப்பமான வீடியோவை பதிவிறக்கம் செய்ய Download என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த வீடியோக்களை MP3 மற்றும் MP4 போர்மட்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஓன்லைனில் இருந்த படியே பாடலை MP3யாகவும், MP4கவும் கேட்க முடியும். மேலும் பதிவிறக்கிய வரிசைப்பட்டியலை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியும்.

Monday 11 July 2011

யூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு

யூடியூப் வீடியோவின் புதிய தோற்றத்தை பெறுவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 12 யூலை 2011, 05:27.43 மு.ப GMT ]
கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வருகின்றது. கூகுளின் தேடியந்திரம், ஜிமெயிலின் புதிய தோற்றம் மற்றும் பிளாக்கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங்களை கூகுள் தற்பொழுது செய்துள்ளது.
அடுத்து கூகுளின் வீடியோ தளமான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உருவாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறையில் தான் இப்பொழுது விட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுதல்கள் தேவைபட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய தோற்றத்தை அனைவரின் செயல்பாட்டிற்கும் விடப்படும். யூடியுபின் இந்த புதிய தோற்றத்தின் திட்டத்திற்கு Cosmic Panda என பெயரிட்டுள்ளது.
இந்த புதிய தோற்றத்தை பெற இந்த லிங்கை Youtube New Look கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லுங்கள்.
அந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே உள்ள Try it Out என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் யூடியுப் தளம் புதிய தோற்றத்துடன் மாறிவிடும்.
இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகளும் கூகுள் புகுத்தியுள்ளது. புதிய வகை கருப்பு நிறத்தினால் ஆனா நீளமான வீடியோ பிளேயரை இதில் அறிமுகபடுத்தி உள்ளனர்.
உங்களின் Playlist கண்டறிய மிக சுலபமாக வடிவமைத்துள்ளது.  நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவை நிறுத்தாமல் எந்த அளவிலும் (Video Size) மாற்றி பார்த்து கொள்ளலாம்.
வீடியோக்களுக்கு கருத்துரைகள் கொடுத்தால் அவர்களின் ப்ரோபைல் படங்கள் தெரிகிறது. Related Videos பெரிய அளவில் காட்டுகிறது.
மேலும் பல உபயோகமுள்ள வசதிகளை யூடியுப் புகுத்தியுள்ளது. இந்த புதிய தோற்றம் தேவையில்லை என நினைத்தால் Cosmic Panda இந்த தளத்திற்கு மறுபடியும் சென்று அங்கு உள்ள Older Version என்பதில் கிளிக் செய்தால் மறுபடியும் பழைய தோற்றத்தை பெறலாம்.http://www.youtube.com/cosmicpanda

Friday 8 July 2011

திட்டமிட உதவும் இணையதளம்

திட்டமிட உதவும் இணையதளம்
[ வெள்ளிக்கிழமை, 08 யூலை 2011, 07:36.26 மு.ப GMT ]
சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொரு செயலையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவார்கள்.
இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியும் உங்களுடைய வாழ்க்கையிலும் வரவேண்டும் என்று விரும்பினால் அதற்கு கை கொடுப்பதற்காக டைம்ஸ்லாட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
டூ டூ லிஸ்ட் என்று சொல்லப்படும் செய்ய வேண்டியவற்றை குறித்து வைத்துக் கொள்ள உதவும் வகையைச் சேர்ந்த இந்த தளம் தினசரி வேலைகளை அழகாக திட்டமிட்டுக் கொள்ள உதவுகிறது.
மறதிக்கோ, சோம்பலுக்கோ இடம் இல்லாமல் அன்றாட செயல்களை திட்டமிட்டுக் கொள்ள விரும்புவோர்கள் இந்த தளத்தில் உறுப்பினரானால் அவர்களுக்கு என்று ஒரு அட்டவணை பக்கம் ஒதுக்கப்படுகிறது.
மிக எளிதாக இருக்கும் அந்த பக்கம் காலையில் இருந்து துவங்குகிறது. ஒவ்வொருவரும் அன்றைய தினம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை இந்த அட்டவணையில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த அட்டவணையில் ஒவ்வொரு மணி நேரமாக வேலைக்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரவர் தேவைக்கேற்ப இந்த கால அவகாசத்தை மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு காலை முதல் இரவு வரையான பணிகளை இந்த அட்டவணையில் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
அன்றாட அலுவல்களை குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது புதிய யுக்தி அல்ல என்றாலும், வழக்கமாக டைரியில் குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது நடைமுறையில் ஒத்துவரக்கூடியதாக இருப்பதில்லை. அதற்கு மாறாக மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த இணைய அட்டவணை அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாள் முடிவிலும் இந்த அட்டவணையைப் பார்த்து அந்த தினத்துக்கான அலுவல்களை செய்து விட்டோமா என்பதை அலசிப் பார்க்கலாம். இதே போல ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய தினத்திற்கான பணிகளை திட்டமிட்டு செயல்படலாம்.
இந்த அட்டவணையில் நாள் காட்டியும் இணைக்கப்பட்டிருப்பது விசேஷமானது. இந்த நாள் காட்டியில் வரும் காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளையும் குறித்து வைக்கலாம். தொலைபேசி பில் கட்டுவதில் துவங்கி, வங்கி தவணையை செலுத்துவது வரை செய்ய வேண்டிய பணிகளை அந்த தினங்களில் குறித்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் இந்த அட்டவணையானது மிகச்சிறந்த நினைவூட்டல் சேவையாகவும் செயல்படும். நாள் காட்டியை ஒரு பார்வை பார்த்தால் எந்தெந்த தினத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விடலாம்.
இதே போலவே கடந்த வாரம் அல்லது அதற்கு முந்தைய மாதம் என்ன செய்து இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் நினைவுகளை புரட்டிப் பார்க்காமல் இந்த நாள் காட்டியை புரட்டிப் பார்த்தாலே போதும். இவ்வாறு கடந்த கால அலுவல்களின் சேமிப்பு கிடங்காகவும் இந்த அட்டவணை கை கொடுக்கிறது.
மிக எளிமையான வடிவமைப்பும், சிக்கல் இல்லாத அட்டவணையுமே இந்த சேவையின் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அதிக குழப்பங்களுக்கு இடம் தராமல் ஒருவர் தனது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ள இந்த சேவை கை கொடுக்கிறது.
வெற்றி பெற்ற மனிதர்களைப் போலவே தாங்களும் வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், செய்ய நினைத்தவற்றை சோம்பலால் செய்ய முடியாமல் போய் வருந்துபவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
திட்டமிடுவதற்கு கை கொடுக்கக்கூடிய இணையதளங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அவற்றில் மிகவும் எளிமையான தளமாக இந்த டைம்ஸ்லாட் அமைந்துள்ளது.

Wednesday 6 July 2011

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 04:31.00 மு.ப GMT ]
தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர். இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு.
இனி அந்த கவலை வேண்டாம். நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம். தினமும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சில தளங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
அதில் இருப்பது போல் வண்ணம் நம் தளத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம். Enter Url என்பதை சொடுக்கி நாம் வண்ணத்தை மாற்ற விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் வலது பக்கம் இருக்கும் Hue, Saturation, Lightness,C ontrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு கலர் மாற்றம் செய்து Proceed என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download Result என்பதை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம்.

கணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய


கணணியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய
[ புதன்கிழமை, 06 யூலை 2011, 07:52.57 மு.ப GMT ]
உலகில் கோடிக்கணக்கான கணணிகள் இருந்தாலும் ஒவ்வொரு கணணிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கப்படுகிறது.
இந்த ஐ.பி எண்ணை வைத்து ஒரு கணணியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் இணைய திருடர்கள் கணணியின் ஐ.பி எண்ணை அடிப்படையாக கொண்டே கணணியை முடக்குகின்றனர்.
கணணியின் ஐ.பி. எண் சுலபமாக கண்டறிய பல இணையதளங்கள் உள்ளன. இந்த ஐ.பி எண்களை நாம் ஓப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். இந்த தளங்களில் ஐ.பி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர் மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.
1. What is my ip address: இந்த தளம் ஐ.பி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐ.பி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணணியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.
2. What Is My IP: இந்த தளத்தில் நம்முடைய கணணியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். தேவைப்படுபவர்கள் அதை படித்து ஐ.பி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
3. IP Address World: இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர்.

Tuesday 5 July 2011

உங்களது ஆங்கில சொல் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு


உங்களது ஆங்கில சொல் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 04:50.34 மு.ப GMT ]
ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.
காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.
என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும், ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும், ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே, இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.
முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகி விட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.
கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர். குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.
அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. குறுங்கல்வி(மைக்ரோ லேர்னிங்) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிகபட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை. சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.
எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா? மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும். வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.
மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது. ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான். அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.
கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை. ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான். அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம். அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.
உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு. இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம். இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.
பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம். புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.
பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம். கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். இலக்கண பிழை உச்சரிப்பு போன்றவற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.
வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம். வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம். தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.
http://classbites.com/

மிக எளிதாக இமேஜ் கேலரியை உருவாக்குவதற்கு


மிக எளிதாக இமேஜ் கேலரியை உருவாக்குவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011, 04:57.02 மு.ப GMT ]
இணையதளங்களில் ஒளிப்படங்களை அட்டவணை போல காட்சியளிப்பதை Image Gallery என்று சொல்வார்கள். இதனை Flash மென்பொருள் கொண்டு உருவாக்குவார்கள்.
இதில் செய்யப்படும் படங்கள் அழகாகவும் பலவித 3டி எபெக்ட்களுடனும் உருவாக்குவதால் இணையதளங்களில் பிளாஷ் கேலரி கண்ணைக் கவரும் வகைகளில் இருக்கும்.
நாம் பிளாஷ் மென்பொருளை அறியாமல் இருப்பின் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு எப்படி கேலரி உருவாக்குவது? இந்த சிக்கல்களைப் போக்கும் எளிமையான மென்பொருள் தான் CU3OX ஆகும்.
இந்த மென்பொருள் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு எளிமையான முறையில் விரைவாக ஒளிப்பட கேலரிகளை உருவாக்கலாம். இதனை வைத்து நமது இணையதளங்களில் படங்களை பேனர் விளம்பரமாகவும் ஸ்லைட் ஷோ போன்று பொதிந்து வைத்துக் காட்டலாம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இணையத் தொழில்நுட்பங்களான FLASH, HTML,CSS, JavaScript போன்றவற்றின் அறிவு இல்லாமலேயே 3D வகையிலான கேலரிகளை உருவாக்குவது தான்.
இந்த மென்பொருளில் படங்கள் நகர்வது, எபெக்டுகள், ஒவ்வொரு படத்திற்கான நேரம் போன்றவற்றை எளிதாக அமைக்கலாம். இதில் நமக்கு வேண்டிய ஒளிப்படங்களை இந்த மென்பொருளுக்கு இழுத்து விட்டுக் கொள்ள முடியும். கேலரி உருவாக்கி முடிந்தவுடன் இணையதளத்தில் இதற்கான கோடிங்கை கொப்பி செய்து பதிவேற்றிக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளை நிறுவியதும் இதில் Add பட்டனைக் கொடுத்து நமக்கு வேண்டிய புகைப்படங்களை சேர்க்க வேண்டும். பின்னர் படங்களுக்கு எபெக்ட் கொடுக்க Effects என்பதில் தேர்வு செய்யவும். பின்னர் ஒவ்வொரு படத்திற்கான தலைப்பும் குறிப்பும் கொடுக்க Headline மற்றும் Description என்பதில் தட்டச்சிட்டு Publish என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
இதன் பின்னர் கேலரிக்கான அமைப்புகள் தோன்றும். இதில் General என்ற டேபில் கேலரிக்கான தலைப்பு, வாட்டர்மார்க், லோகோ, எதாவது ஆடியோ இணைக்க போன்ற அமைப்புகளைக் கொடுக்கலாம்.
அடுத்த Images டேபில் ஒவ்வொரு படங்களின் அளவு, சுழற்றும் எபெக்ட் மற்றும் ஒவ்வொரு படம் வருவதற்கான இடைவெளி நேரங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
கடைசியில் Publish டேபில் கேலரி எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும். இல்லை இணையதளத்திற்கு பதிவேற்ற வேண்டும் எனில் FTP சர்வர் முகவரியை அளித்து விட்டு Publish பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.
சில விநாடிகளில் இமேஜ் கேலரி உருவாக்கப்படும். எந்தவொரு இணையத் தொழில்நுட்பமும் அறியாமல் எளிதாக ஃபிளாஷ் இமேஜ் கேலரிகளை உருவாக்க இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.
http://www.cu3ox.com/

Sunday 3 July 2011

அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி


அனைவருக்கும் உதவும் ஓன்லைன் தமிழ் அகராதி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 04:39.28 மு.ப GMT ]
ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பு கொடுக்க பல தளங்கள் உள்ள நிலையில் தமிழ் வார்த்தைக்கு விரிவான விளக்கம் கொடுப்பதற்கு ஓன்லைன் தமிழ் அகராதி உதவுகிறது.
அழகு கொஞ்சும் தமிழில் உள்ள வார்த்தைகளை பல நேரங்களில் நமக்கு விளக்கம் தெரியாமல் முழித்து கொண்டு இருப்போம்.
இணையதளங்களில் தேடினாலும் இதற்கான விளக்கம் பல நேரங்களில் தெரிவதில்லை. ஆனால் இனி தமிழ் வார்தைக்கு உண்டான விளக்கத்தை எளிதாக புரியும் படி அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை அனைவரும் நொடியில் அறிந்து கொள்ளும் பொருட்டு தமிழ் அகராதி 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் அகராதியில் நாம் முந்தைய காலத்தில் பயன்படுத்தி வந்த அரிய தமிழ் வார்த்தைகளுக்கான விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். கூடவே நாம் கொடுக்கும் வார்த்தைக்கு இணையான வார்த்தையையும் காட்டுகிறது.
திருக்குறளில் கூட பல வார்த்தைகளுக்கு விளக்கத்தை தேடும் நமக்கு இத்தளம் ஒரு அரிய பொக்கிஷம் தான். தமிழ் பேராசியர்கள் மற்றும் தமிழ் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Friday 1 July 2011

இளநீரின் மருத்துவ குணங்கள்


இளநீரின் மருத்துவ குணங்கள்
[ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 01:57.21 பி.ப GMT ]
இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink).
இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.
இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மயக்கம், அசதி ஏற்படும் போது மருத்துவரிடம் செல்வதற்கு முன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும்.
கடும் நீரிழப்பின் போது(severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும். மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும்.
அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.
பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும் போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்து விட்டு உடனடியாக இளநீர் பருகி வர உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு(Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.
டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.
உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள்(Carbonated Drinks), பனிக்கூழ்(Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
மேலும் தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு தேவைப்படுகிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இந்த உப்பு இளநீரில் அதிகம் காணப்படுகிறது.

உங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்குவதற்கு


உங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்குவதற்கு
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 04:45.57 மு.ப GMT ]
உங்களுடைய பெயரில் கூகுளின் இணையதளம் வந்தால் எப்படி இருக்கும். அந்த வசதியை ஒரு இணையதளம் நமக்கு செய்து தருகின்றது.
இத்தளத்திற்கு சென்றவுடன் அதில் உள்ள Enter your Name Here என்கின்ற விண்டோவில் உங்களது பெயரை தட்டச்சு செய்யவும்.
அதன் கீழே உள்ள விண்டோவில் விதவிதமான எழுத்துருக்கள் இருக்கும். நமக்கு எந்த டிசைன் தேவையோ அந்த எழுத்தின் கீழே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்து என்டர் தட்டவும்.
சில வினாடிகளில் நமது பெயருடன் கூகுளின் இணைய தளம் ஓப்பன் ஆகும். கூகுளின் லோகோ ஸ்டைலிலும் உங்களுடைய பெயரை கொண்டு வரலாம்.
நீங்களும் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து வேண்டியவர்களுக்கு அதன் லிங்கை அனுப்பி வையுங்கள். அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்கையில் அவர்களுடைய பெயர் அங்கு கிடைக்கும்.
இதை நீங்கள் தொடக்க பக்கமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு


வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 07:44.12 மு.ப GMT ]
வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது Youtube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன.
இருப்பினும் இணையத்தில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்.
நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.
அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும்.
பின் வீடியோ தரவிறக்கம் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ போர்மட்டுகள் avi, wmv, mpeg1, mpeg2, mp4, mov, flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
http://www.allvideodownloader.com/