Wednesday 29 June 2011

குரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்


மென்பொருள் செய்தி
குரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்
[ புதன்கிழமை, 29 யூன் 2011, 05:11.21 மு.ப GMT ]
ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போலவும், ஒரு பெண் பேசும் குரலை நேரடியாக ஆண் பேசும் குரலாகவும் மாற்றம் செய்ய ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும். ஆனால் கைத்தொலைபேசிகளில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால் கணணியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கி நம் கணணியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும்.
உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்து விட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man, Tiny Folks, Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் Tiny Folks என்பது கேலிசித்திர கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் அரட்டையில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம்.
உண்மையிலே அவர் இது போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக் கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday 28 June 2011

பிடிஎப் கோப்புக்களை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வதற்கு


பிடிஎப் கோப்புக்களை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வதற்கு
[ புதன்கிழமை, 29 யூன் 2011, 05:00.54 மு.ப GMT ]
பிடிஎப் கோப்புக்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை வேர்ட் கோப்பாக மாற்றி பின்பு தான் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்ற இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் பலவும் சரியாக வேலை செய்வது இல்லை.
முறையாக பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வது கிடையாது. ஒரு சில குறைபாடுகள் இருக்கதான் செய்கின்றன. எந்த வித குறைபாடும் இல்லாமல் மாற்றம் செய்ய Able2Doc என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
தற்போது Able2Doc என்ற மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தருகின்றனர். இந்த மென்பொருளை தரவிறக்க முகநூலில் கணக்கு இருக்க வேண்டும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுக்கென ஒரு இரகசிய கோடினை பெறுவீர்கள் அதனை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் Able2Doc PDF to Word Giveaway என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் இரகசிய எண்னை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பின் மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் Able2Doc அப்ளிகேஷனை ஒப்பன் செயது. குறிப்பிட்ட பிடிஎப் கோப்பை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில எழுத்துருக்களை உடைய பிடிஎப் கோப்புக்கள் மட்டுமே வேர்ட் கோப்புக்களாக மாற்ற முடியும்.
பிடிஎப் டாக்குமெண்டை ஒப்பன் செய்து Select என்னும் தேர்வினை அழுத்தி All மற்றும் Area என்னும் செலக்ட் தேர்வுகளை அழுத்தி பிடிஎப் கோப்பை தேர்வு செய்யவும். நீங்கள் எவ்வற்றையெல்லாம் தேர்வு செய்கிறீர்களோ அவைகள் மட்டுமே மாற்றம் ஆகும்.
பின் Convert என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் மற்றும் ஒப்பன் ஆப்பிஸ் கோப்பு போர்மட்களில் மாற்றம் செய்து டாக்குமெண்ட்களை சேமித்துக் கொள்ள முடியும். பின் Convert to word என்னும் தேர்வில் Standard(Recommended) என்பதை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Continue என்னும் பொத்தானை அழுத்தவும். மாற்றம் செய்த கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு கோப்பின் பெயரையும் குறிப்பிடவும்.
தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட கோப்பு போர்மட்டில் டாக்குமெண்ட் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

பிடிஎப் கோப்புக்களை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வதற்கு


பிடிஎப் கோப்புக்களை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வதற்கு
[ புதன்கிழமை, 29 யூன் 2011, 05:00.54 மு.ப GMT ]
பிடிஎப் கோப்புக்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை வேர்ட் கோப்பாக மாற்றி பின்பு தான் மாற்றங்கள் செய்ய வேண்டும்.
பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்ற இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களில் பலவும் சரியாக வேலை செய்வது இல்லை.
முறையாக பிடிஎப் கோப்பை வேர்ட் கோப்பாக மாற்றம் செய்வது கிடையாது. ஒரு சில குறைபாடுகள் இருக்கதான் செய்கின்றன. எந்த வித குறைபாடும் இல்லாமல் மாற்றம் செய்ய Able2Doc என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
தற்போது Able2Doc என்ற மென்பொருளை லைசன்ஸ் கீயுடன் இலவசமாக தருகின்றனர். இந்த மென்பொருளை தரவிறக்க முகநூலில் கணக்கு இருக்க வேண்டும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூலின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுக்கென ஒரு இரகசிய கோடினை பெறுவீர்கள் அதனை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் Able2Doc PDF to Word Giveaway என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் இரகசிய எண்னை உள்ளிட்டு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பின் மென்பொருளை கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் Able2Doc அப்ளிகேஷனை ஒப்பன் செயது. குறிப்பிட்ட பிடிஎப் கோப்பை ஒப்பன் செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் ஆங்கில எழுத்துருக்களை உடைய பிடிஎப் கோப்புக்கள் மட்டுமே வேர்ட் கோப்புக்களாக மாற்ற முடியும்.
பிடிஎப் டாக்குமெண்டை ஒப்பன் செய்து Select என்னும் தேர்வினை அழுத்தி All மற்றும் Area என்னும் செலக்ட் தேர்வுகளை அழுத்தி பிடிஎப் கோப்பை தேர்வு செய்யவும். நீங்கள் எவ்வற்றையெல்லாம் தேர்வு செய்கிறீர்களோ அவைகள் மட்டுமே மாற்றம் ஆகும்.
பின் Convert என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் மற்றும் ஒப்பன் ஆப்பிஸ் கோப்பு போர்மட்களில் மாற்றம் செய்து டாக்குமெண்ட்களை சேமித்துக் கொள்ள முடியும். பின் Convert to word என்னும் தேர்வில் Standard(Recommended) என்பதை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Continue என்னும் பொத்தானை அழுத்தவும். மாற்றம் செய்த கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு கோப்பின் பெயரையும் குறிப்பிடவும்.
தற்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட கோப்பு போர்மட்டில் டாக்குமெண்ட் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு


ஆராய்சி செய்தி
வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 05:06.22 மு.ப GMT ]
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஏதேதோ வழிகளை எல்லாம் கடைப்பிடித்து பின்பற்றுவார்கள், ஆனாலும் முன்னேறியதில்லை. இந்த வழிகளை கையாளுங்கள் வெற்றி உங்கள் பக்கம்...
1. இணக்கமான உறவு:
உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் பேச வேண்டும். இந்த இணக்கமான உறவினை மேற்கொள்ள விரும்புபவர்கள் சில அத்தியாவசியமான நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது ஒருவர் பேசும் பேச்சுக்களில் இருந்தே பேசுபவர் எந்த துறையை சேர்ந்தவர், அவர் எப்படிப்பட்டவர், எந்த வழியில் பேசினால் அவரை ஈர்க்க முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் திறமையை வளர்க்க வேண்டும். இந்த வகையில் வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பேசப்படும் நடவடிக்கை மூலம் உங்கள் வியாபார வெற்றி பெருகும். குடும்ப உறவு வலுக்கும், நட்பு நீடிக்கும்.

2. குழப்பங்களை நீக்கும் தெளிவு:
நம் மனதை எப்பொழுதும் தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும் குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும். எந்த காரியத்தையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும். நாம் ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட நிலையிலும் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமல், அந்த இடத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்து அந்த சிக்கலை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சிக்கல் நிறைந்த வேலைகளை செய்யப்போகும்போது `ஐயோ இந்த வேலையை எப்படி செய்யப் போகிறோமோ!' என்று தயக்கத்துடன் செல்லாமல் ஏதோ விளையாட்டாக அந்த வேலையை செய்வது போன்ற எண்ணத்துடன் செய்தால் அது சிறப்பாக முடியும்.
ஒரு வேலையை ரசித்து செய்யும்போது மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுமையான ஒரு செயல் அல்லது திட்டம் தீட்டும்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், நம் மனதிற்குள் நாமே ஆழமாக பல வழிகளில் சிந்திக்கும்போது பல புதிய வழி முறைகள் தோன்றும். எப்பொழுது நமக்குள் நாமே சிந்திக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது மனதில் உள்ள குழப்பங்கள் மாறி முழுமையான சக்தியுடன் கூடிய பல வழிகள் உருவாகும்.
3. ஒருநிலைப்படுத்துதல்:
எப்பொழுது ஒருவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும். குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.
முதன் முதலில் நீங்கள் முழுமூச்சாக ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதில் முழுமையான சந்தோஷம் மற்றும் வெற்றியை பெறும்பொழுது நீங்கள் உங்கள் உண்மையான மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் கை விரல்களை மடக்கி முழங்கையை கீழ்நோக்கி இழுத்து உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள். இது மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தானாக வெளிப்படும் உணர்வுகளின் செயற்பாடாகும். ஆனால் எப்பொழுது உங்கள் வேலை சரியாக அமையவில்லையோ அப்போது உங்களுக்குள் இது போன்ற உணர்வுகள் தோன்றாது.
4. ஒருங்கிணைத்து முடிவெடுத்தல்:
ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும்போது சில குழப்பங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் இருந்தோ அல்லது ஏற்கனவே இந்த வேலையை செய்து முடித்துள்ள அனுபவசாலிகளிடம் இருந்தோ உதவிகளை பெற வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும்போது நல்ல தீர்வு கிடைக்கிறது.
எடுத்துக்காட்டாக உங்களுக்கு உங்கள் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேநேரத்தில் சாக்லேட் உண்பதற்கும் ஆசை உள்ளது என்று வைத்துக் கொள்வோம். சாக்லேட் உண்பதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. இதில் சாக்லேட் உண்பதை விட உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. எனவே இரண்டு ஆசைகளையும் ஒரே நேரத்தில் சிந்தித்து அதில் எது சிறந்ததோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
5. சிறந்த மொழி வெளிப்பாடு:
பேசும்போது சில வார்த்தைகள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கிவிடும். குறிப்பாக ஆனால் என்ற வார்த்தையானது எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்தும் வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும்போது `நான் உங்கள் நலனை விரும்புகிறேன் ஆனால்....' என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வார்த்தையில் இருந்தே அவரது உடல்நலனில் நீங்கள் அக்கறையில்லாமல் இருப்பதுபோல் ஆகிவிடுகிறது.
இதை கேட்டதுமே உங்கள் நண்பருக்கு இதுவரை பேசியது அனைத்தும் பயனற்று போய்விட்டது என்ற எண்ணம் தோன்றிவிடும். இதனால் நீங்கள் எந்த காரியத்தை பேசிக் கொண்டிருந்தீர்களோ அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடும். எனவே அந்த மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மேலும் எதற்கெடுத்தாலும் இல்லை, தெரியாது என்று சொல்லுவதை தவிர்த்து ஆம், தெரியும் என்று பேசுங்கள் வெற்றி பெறலாம்.

Sunday 26 June 2011

உங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பதற்கு


உங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பதற்கு
[ புதன்கிழமை, 22 யூன் 2011, 04:39.55 மு.ப GMT ]
சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது.
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும். ஒரு முறை நாம் தட்டச்சு செய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழி பெயர்க்கலாம்.
இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் Translate(மொழி மாற்றம்) செய்ய வேண்டிய வார்த்தையை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும்.
கூகுள் துணையுடன் இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின் பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும்.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு


இணையத்தில் எதையும் மறக்காமல் இருப்பதற்கு
[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 04:36.13 மு.ப GMT ]
இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது இணைய நினைவுகள் அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச் லைப் இணைய சேவையை உபயோகப்படுத்தலாம்.
காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. அதாவது பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என இணையத்தில் பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது.
இந்த சேவையின் அருமையை உணர அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும். ஒரு முறை இந்த சேவையை பயன்படுத்தி பார்த்தீர்கள் என்றால் இது போன்ற சேவை இல்லவே இல்லை என்று மனதார பாராட்டுவீர்கள். இன்னும் சிலர் இது போன்ற சேவையை தான் எதிர்பார்த்திருந்தோம் என்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த அளவுக்கு மிக அழகாக ஒருவரின் இணைய சுவடுகளை பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது. இணைய சுவடுகள் என்றால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள்.
இப்போது பெரும்பாலானோருக்கு பேஸ்புக் பக்கம் இருக்கிறது. பலர் டிவிட்டரிலும் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வலைப்பதிவு வைத்திருக்கின்றனர். ஆக கருத்துக்களையோ அனுபவங்களையோ பதிவு செய்வதோ பகிர்ந்து கொள்வதோ இன்று மிகவும் சுலமாகியிருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவற்றையெல்லாம் தொகுக்கவோ நினைவில் கொள்ளவோ வழியில்லை. உதாரணத்திற்கு பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். அது என்ன என்று இப்போது யோசித்து பார்த்தால் நினைவுக்கு வர மறுக்கும்.
பேஸ்புக்கிலேயே பின்னோக்கி போய் தேடலாம் என்றாலும் அது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால் பேட்ச் லைப் சேவையை நீங்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இப்படி தேடுவது கூகுலில் தேடுவதை விடவும் எளிதானது.
ஏன் என்றால் பேஸ்ட் லைப் தளத்தில் உங்கள் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் திகதி வாரியாக பதிவாகியிருக்கும். நீங்கள் தேட விரும்பும் நாளுக்கான பக்கத்தை கிளிக் செய்தால் அன்றைய பதிவுகள் முழுவதையுமே பார்க்க முடியும்.
பேஸ்புக்கில் உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள், புகைப்படங்கள் மற்றும் இணைப்புகள் என எல்லாவற்றையுமே பார்க்கலாம். எதையுமே மறக்க வேண்டியதில்லை. இதே போலவே டிவிட்டரில் செயல்படுபவர்கள் தங்கள் குறும்பதிவுகள் அனைத்தையும் திகதி வாரியாக அணுகலாம்.
பேட்ச் லைப் தளத்தில் நுழைந்ததுமே தோன்றும் பக்கத்தில் இடது பக்கத்தில் நாட்காட்டி இடம் பெற்றிருக்கும். அதில் மாதத்தையும் திகதியையும் தேர்வு செய்து கிளிக்கினால் அன்றைய தினத்துக்கான பதிவுகள் வலதுபுறத்தில் தோன்றும்.
பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வலைப்பதிவு என பல சேவைகளை பயன்படுத்துபவர்கள் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் அணுக முடியும். பேட்ச் லைப்பில் முகவரி கணக்கை துவக்கிவிட்டு பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளை அணுக அனுமதி அளித்து விட்டால் அதன் பிறகு தானாகவே உங்கள் பதிவுகள் இங்கே சேமிக்கப்பட்டு விடும்.
அதன் பிறகு உங்கள் இணைய நடவடிக்கையை திரும்பி பார்க்க விரும்பினால் எளிதாக அதை நிறைவேற்றி கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் எழுந்தாலும் அதை தீர்த்து கொள்ளலாம்.
இப்படி ஒரே இடத்தில் அனைத்து இணைய பகிர்வுகளையும் தொகுத்து தருவதோடு இதிலேயே தனியே உள்ள குறிப்பேடு வசதியை பயன்படுத்தி மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ளலாம்.

பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்


பென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்
[ திங்கட்கிழமை, 27 யூன் 2011, 04:26.15 மு.ப GMT ]
இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஏனெனில் கணணி பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.
அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.
1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.
2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
அதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.
3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்: இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.
இதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.
4. General Tips - சில பொதுவான வழிமுறைகள்: அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள்.
அத்துடன் வீட்டினுள் கணணி, ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென்ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் தகவல்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.
சில நேரங்களில் யூஎஸ்பி பென்ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணணியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென்ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும்.
அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென்ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.

உங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழகுபடுத்த


உங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழகுபடுத்த
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 06:47.54 மு.ப GMT ]
உங்களின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஓர் அழகான வீடியோ தொகுப்பாக மாற்றி கொள்ளலாம்.
அத்துடன் நீங்கள் அழகாக்கி கொண்ட வீடியோ தொகுப்புக்கு பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை கொடுக்கவும் முடியும். இத்தகைய வசதிகளை நீங்கள் மென்பொருளின்றி ஓன்லைன் மூலம் செய்ய முடியும்.
இந்த தளத்தில் சென்று நீங்கள் வடிவமைக்க விரும்பும் மாதிரியினை தெரிவு செய்து கொண்டு MAKE A VIDEO என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் புதிய பக்கத்தில் ADD IMAGES AND VIDEO என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை அல்லது வீடியோ காட்சிகளை UPLOAD செய்யவும்.
மேலும் படங்களை UPLOAD செய்ய ADD MORE என்பதை கிளிக் செய்து படங்களை சேர்க்க முடியும். இதே போன்று ADD SOUND TRACK என்பதை கிளிக் செய்வதன் மூலம் பாடல்களை அல்லது ஒலி வடிவங்களை சேர்க்கலாம்.
பின்னர் SAVE AND PREVIEW என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாரித்த வீடியோக்களை பார்க்க முடியும். இப்போது EXPORT என்பதை கிளிக் செய்து பின்னர் தோன்றும் பக்கத்தில் FREE VIDEO என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோக்களை YOUTUBE, FACEBOOK , TWITTER போன்ற தளங்களிலும் பகிர முடிவதுடன் மின்னஞ்சல் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

Thursday 23 June 2011

தினமும் உங்கள் கணணியை அழகுப்படுத்த


தினமும் உங்கள் கணணியை அழகுப்படுத்த
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 04:49.22 மு.ப GMT ]
தினம் உங்கள் கணணியின் திரையை அழகுபடுத்துவதாக இருந்தால் இந்த வலைத்தளம் உதவியாக இருக்கும். இந்த தளத்தில் பல புதிய ஸ்கிறீன் சேவர்கள் கிடைக்கிறது.
இதில் விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் கணணிகளுக்கும் ஸ்கிறீன் சேவர்கள் உள்ளது. இந்த தளத்தில் உள்ள வகைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை. எந்த ஒரு தீங்கும் இல்லாத ஸ்கிறீன் சேவர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கிறீன் சேவரை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.
இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தால் புதிய ஸ்கிறீன் சேவர் வரும் பொழுது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.

Google Voice Search: கூகுளின் புதிய வசதி


Google Voice Search: கூகுளின் புதிய வசதி
[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 04:42.25 மு.ப GMT ]
மிக பிரபலமான கூகுள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
நாளாந்தம் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகுள் நிறுவனத்தின் படைப்புக்களில் இருந்து அண்மையில் வெளிவந்த வசதிகளுள் ஒன்று தான் Google Voice Search.
கையடக்க தொலைபேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகுள் குரோமில் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் தேடும் விடயங்களை தேடி தருகிறது. தற்போது இந்த வசதி கூகிள் குரோமில் மட்டுமே உள்ளது.
உங்கள் மைக்ரோ போனை தயார் செய்து கொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAK NOW என தோன்றும் போது நீங்கள் தேடும் சொல்லின் வார்த்தையை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் ஆரம்பமாகும்.

Sunday 19 June 2011

http://www.freeopener.com/


Free Opener: அனைத்து வகையான போர்மட் உடைய கோப்புக்களை திறப்பதற்கு
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 04:44.04 மு.ப GMT ]
நாம் கணணியில் பல்வேறு வகையான போர்மட்டுடைய கோப்புக்களை பயன்படுத்துகின்றோம்.
உதாரணமாக பொட்டோ, ஓடியோ, வீடியோ, PDF, OFFICE கோப்புக்கள் என பல இவற்றை ஓபன் செய்து கொள்வதாயின் அந்தந்த கோப்புக்களை திறக்க பயன்படும் மென்பொருட்களிலே திறக்க முடியும்.
பலதரப்பட்ட கோப்புக்களை ஓரிடத்தில் ஓபன் செய்துகொள்ள துணைபுரிகிறது FREE OPENER என்ற மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் 70க்கும் மேற்பட்ட வகையான கோப்புக்களை திறந்து கொள்ள முடியும்.
இதன் சிறப்பம்சம்:
1. JPEG,GIF, bmp போன்ற போர்மட் உடைய புகைப்படங்களை திறந்து பார்க்க முடியும்.
2. avi, flv, mid, mkv, mp3, mp4, mpeg, mpg, mov, wmv போன்ற மீடியா கோப்புக்களை திறந்து மீடியா பிளேயராக பயன்படுத்த முடியும்.
3. photoshop, pdf, html, office, java , DOC, xls போன்ற கோப்புக்களையும் இலகுவாக திறந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் செயற்படவல்ல மிக சிறந்த பயனுள்ள ஓர் மென்பொருளாகும். அத்துடன் இதன் அளவு 20MB ஆகும்.
http://www.freeopener.com/

Saturday 11 June 2011



இணைய செய்தி
உங்கள் புகைப்படத்திலிருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவதற்கு
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 04:35.24 மு.ப GMT ]
உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும்.
இந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்யவும்.
பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவு செய்யவும். 
அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும். இப்போது படத்தின் மேலேயுள்ள INPAINT என்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்து விடும்.
பின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்து கொள்ளலாம்.

Multi Skype Launcher: ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளை பயன்படுத்த


Multi Skype Launcher: ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளை பயன்படுத்த
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 06:43.05 மு.ப GMT ]
ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும்.
தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டொலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher.
இந்த மென்பொருள் மூலம் ஒரே கணணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும். இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும்.
பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9


தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9
[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 04:27.22 மு.ப GMT ]
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது.
இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது கை கொடுக்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது. இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 
தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை உங்கள் கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் கணணியில் இயங்கும் ஓபரேட்டிங் சிஸ்டம்(விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட்) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்திடவும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

Friday 10 June 2011

புகைப்படங்களின் அளவை தகுந்த படி மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்


புகைப்படங்களின் அளவை தகுந்த படி மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 07:43.36 மு.ப GMT ]
நம் கமெராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை தகுந்த அளவு மாற்றுவதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கமெரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை.
சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இணையத்தளம் உள்ளது.
முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரி சுட்டியை சொடுக்கி குறிப்பிட்ட தளத்திற்கு செல்ல வேண்டும். நமக்கு தேவையான புகைப்படத்தை Browse என்ற பட்டனை சொடுக்கி தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
பின் தோன்றும் விண்டோவில் நமக்கு தேவையான மாற்றங்களை செய்த பின்னர் புகைப்படத்தை கணணியில் சேமித்துக் கொள்ளலாம்.

உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாக திறக்க வைப்பதற்கு


உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாக திறக்க வைப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 10 யூன் 2011, 07:20.55 மு.ப GMT ]
உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தானாகவே பயனாளர் பெயர், கடவுச்சொல் கொடுத்து திறக்க வைக்கலாம்.
முதலில் i macros எனப்படும் addon உங்கள் பயர்பொக்ஸ் பிரவுசர் அல்லது கூகுள் குரோமில் நிறுவிக் கொள்ளுங்கள்.
இதனை தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் பிரவுசரை மறுதொடக்கம் செய்து விடுங்கள். பிறகு addon ஐகான் தோன்றும். இதனை கிளிக் செய்ததும் start, record, play பட்டன்கள் இருக்கும். முதலில் Rec பட்டன் அழுத்துங்கள்.
பின் நீங்கள் உங்கள் ஜிமெயில் தளத்திற்கு சென்று வழக்கம் போல் உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைந்து உங்களது மின்னஞ்சலை படிக்கவோ அல்லது அரட்டையில் நண்பர்களுக்கு பதிலளிக்கவோ செய்யுங்கள்.
பிறகு உங்கள் ஜிமெயில்லை signout செய்து வெளியேறுங்கள். முடிந்தால் http://www.lankasritechnology.com/ என டைப் செய்து இந்த தளத்தை open செய்துவிட்டு stop பட்டனை அழுத்துங்கள்.
இதன் பின் play பட்டனை அழுத்துங்கள். முதலில் www.gamil.com திறந்து அதில் உங்களுடைய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை டைப் செய்து உங்கள் மின்னஞ்சல் திறக்கப்படும். பிறகு நீங்கள் chat செய்த நண்பருக்கு hai good morning என்று டைப் செய்து அனுப்பிவிடும். பிறகு அதுவாகவே மின்னஞ்சல் கணக்கிலிருந்து வெளியேறிவிடும்.
இதனை பார்ப்பதற்கு ஒரு magic போல இருக்கும் உங்கள் நண்பரிடம் செய்து காண்பித்து ஆச்சர்யம் கொடுக்கலாம். கணணி நிறுவனங்களில் தினமும் செய்யக்கூடிய வேலைகளை இதனை வைத்து automatic செய்து விடுவதால் மனிதர்களின் உதவியின்றி தானாகவே தினமும் செய்து விடும்.
நமக்கு twitter ,facebook , gmail போன்ற தளங்களை தானாக திறப்பதற்கு பயன்படுத்தலாம். மேலும் நமக்கு பிடித்த தளங்களை bookmark செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

Thursday 9 June 2011

Google Wallet: கூகுளின் புதிய விதமான வர்த்தகச் சேவை (வீடியோ இணைப்பு)


கைத்தொலைபேசி செய்தி
Google Wallet: கூகுளின் புதிய விதமான வர்த்தகச் சேவை (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 04:44.35 மு.ப GMT ]
சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கூகுள் வாலட்(Google Wallet) என்ற பெயரில் உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது.
இதன் மூலம் கடைகளில் பொருள் வாங்கிய பின் அங்குள்ள சாதனம் ஒன்றின் முன் உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும். உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும்.
கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால் அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC(Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில் அவை இரண்டும் தாங்களாகவே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.
கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.
முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூயார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும்.
பின்னர் அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.
சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.
இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு இணையம் மூலம் டிக்கட் எடுத்து அதனை அச்செடுத்து மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இணையத்தில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப்பட்டுள்ள சாதனத்தின் முன் மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.
கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர் மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.
பணம் மட்டுமின்றி வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.
இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும் போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி.சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.
கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும்.
இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு


கணணி தானாகவே ஷெட்டவுண் ஆவதற்கு
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 06:56.45 மு.ப GMT ]
சில நேரங்களில் நாம் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி வரலாம். மிக முக்கியமான மென்பொருள்களை அல்லது கோப்புகளை தரவிறக்கம் செய்து கொண்டிருப்போம்.
அவ்வாறான வேளையில் தரவிறக்கம் செய்யும் வரை நம்மால் கணணியுடன் இருந்து அதை ஷெட்டவுண் செய்ய முடியாது.
அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவுவதற்கு ஒரு சிறிய மென்பொருள் உள்ளது.

சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண


சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 07:17.46 மு.ப GMT ]
சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 07:17.46 மு.ப GMT ]
இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது Youtube Boxoffice புதிய சேவையை துவக்கி உள்ளது.
இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம். இதற்கு உலவியில் Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம்.
தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்கப்படுகின்றன. விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம். இதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
உங்கள் கணணியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுள் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 07:17.46 மு.ப GMT ]
இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது Youtube Boxoffice புதிய சேவையை துவக்கி உள்ளது.
இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம். இதற்கு உலவியில் Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம்.
தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்கப்படுகின்றன. விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம். இதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
உங்கள் கணணியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுள் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது Youtube Boxoffice புதிய சேவையை துவக்கி உள்ளது.
இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம். இதற்கு உலவியில் Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம்.
தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்கப்படுகின்றன. விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம். இதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
உங்கள் கணணியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுள் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
http://www.youtube.com/boxoffice

VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்குவதற்கு


VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்குவதற்கு
[ வியாழக்கிழமை, 09 யூன் 2011, 04:34.44 மு.ப GMT ]
வி.எல்.சி மீடியா பிளேயரானது ஓடியோ மற்றும் வீடியோக்களை இயக்க உதவும் அப்ளிகேஷன் ஆகும்.
இந்த பிளேயரானது தற்போது அதிகமான கணணி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும்.
வி.எல்.சி மீடியா பிளேயரில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் வீடியோவை வி.எல்.சி மீடியா பிளேயரில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய வி.எல்.சி பிளேயரை ஒப்பன் செய்யவும். பின் Media – Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்யதவுடன் தோன்றும் விண்டோவில் வீடியோவில் URLயை பேஸ்ட் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும்.
இப்போது வீடியோவினை நேரடியாகவே வி.எல்.சி பிளேயரில் காண முடியும். கணணியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது.
அதுபோன்ற சமயங்களில் இந்த வி.எல்.சி பிளேயர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். வீடியோவைவினை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

Monday 6 June 2011

வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க



பாதுகாப்பு செய்தி
வைரஸ்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
[ வியாழக்கிழமை, 02 யூன் 2011, 04:17.54 மு.ப GMT ]
கணணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
சில கணணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை.
ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.
Iobit நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான Advanced System care மற்றும் GameBooster போன்றவையும் மிகுந்த பிரபலமான மென்பொருள்களாகும். இந்த மென்பொருளின் நோக்கமாக அவர்கள் "Extra Protection for your PC Sequrity" என்று குறிப்பிடுகிறார்கள். இந்த மென்பொருள் என்னென்ன பாதுகாப்பை வழங்குகிறது?
1. ஆண்டிவைரஸ்களால் செய்ய முடியாத மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்கள்(Malwares, spywares) எங்கிருந்தாலும் கண்டுபிடித்து அழிக்கிறது. புதியதாக வராமல் தடுத்து பரவாமல் பார்த்துக் கொள்கிறது. மால்வேர்கள் மற்றும் ஸ்பைவேர்களும் வைரஸைப் போன்று கணணியைப் பாதிக்கச் செய்யக் கூடியவை.
2. இவை மட்டுமின்றி பலவகையான ஸ்பைவேர்கள், ஆட்வேர்கள்(Adwares), மோசமான ட்ரோஜன் வைரஸ்கள்(Trojans), Keyloggers, bots, worms, hijackers போன்றவற்றிலிரிந்து கணணியைப் பாதுகாக்கிறது.
3. இதன் DualCore நிரல் எஞ்சின் சிக்கலான மால்வேர்கள், ஒளிந்திருக்கும் ஸ்பைவேர்களை விரைவான நேரத்தில் கண்டறிந்து அழிக்கின்றன.
4. இதில் பலவகையான பாதுகாப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளன. Startup guard, Process guard, Network guard, File guard, Cookie guard, Browser guard, USB guard, Malicious Action guard. இது போன்று கணணிக்கு எங்கிருந்தெல்லாம் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவை உள்ளே வரும் இடங்கள், பரவும் இடங்களில் உட்கார்ந்து கொண்டு அவற்றைக் கவனித்து அழிக்கிறது.
5. இந்த மென்பொருள் கணணியின் டிரைவர் கோப்புகளையும் சரியாக சோதித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. சோதிக்க மூன்று வசதிகள் தரப்பட்டுள்ளன. Smart Scan, Full Scan, Custom Scan.
ஆண்டிவைரஸ் கணணியில் நிறுவப்பட்டிருந்தாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம். இது ஏற்கனவே இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருளோடு இணைந்து செயல்படக்கூடியது.

சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையம்


சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையம்
[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 04:53.47 மு.ப GMT ]
சாதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் சச்சின் டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்றில்லை. நாம் செய்து முடித்த சின்ன சின்ன செயல்களை கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
மனதிற்கு இனிய பயணம் மேற்கொண்டிருந்தாலோ, புதிய ஊருக்கு சென்று வந்திருந்தாலோ உடனே அவை பற்றிய அனுபவத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள துடிப்போம் அல்லவா.
பேஸ்புக்கில் இதை தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா? இப்போது இந்த பகிர்வை இன்னும் கூட அழகாக இன்னும் சுவையாக செய்யலாம்.
அதாவது நமது சாதனைகளை, அதாவது நாம் செய்து முடித்தவற்றை அட்டகாசமான முறையில் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயல்கள் வழக்கமான பேஸ்புக் சுவர் செய்தியாக தோன்றாமல் உலக வரைபடத்தின் மீதேறி நாம் தகவல் தெரிவிப்பது போல கண்ணை கவரும் வகையில் தோன்றும்.
அதாவது நாம் எந்த இடத்திலிருந்து செயல்பட்டோமோ அந்த இடத்தில் இருந்து தகவல் தெரிவிப்பது போல இந்த பகிர்வு அமைந்திருக்கும். வரைபடத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தில் பலூன் போன்ற ஒரு குறி தோன்றும். அதில் கிளிக் செய்தால் உங்கள் செயல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இப்படி தனியேவும் நமது செயல்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட அந்த நேரத்தில் யாரெல்லாம் உடனிருந்தனரோ அவர்கள் பெயர்களையும் சேர்த்து பகிர்ந்து கொள்ளலாம்.
பேஸ்புக்கில் சுவர் செய்தியாக ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்வதைவிட இப்படி உலக வரைபடம் மூலம் பகிர்ந்து கொள்வது வண்ணமயமாக இருக்கும்.
கூகுள் வரைபட சேவை உதவியோடு இந்த சாதனை அறிவிப்பு சேவையை டிடிட் இணையதளம் வழங்குகிறது. பேஸ்புக் கணக்கு மூலமே இந்த சேவையை பயன்ப‌டுத்தலாம். பேஸ்புக் சார்ந்த் எத்தனையோ பயனுள்ள சேவைகளில் இதுவுமொன்று.

நீங்கள் பிறந்த வருடத்தில் உலகில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள


நீங்கள் பிறந்த வருடத்தில் உலகில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள
[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 07:54.05 மு.ப GMT ]
எல்லோருக்கும் தான் பிறந்த வருடம் தெரியும். ஆனால் அந்நேரத்தில் உலகத்தில் என்ன நடந்தது என்பது பலருக்குத் தெரியாது.
இக்கவலையைப் போக்கத் தான் இந்தத் ஆங்கிலத் தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
நாம் பிற‌ந்த‌ வ‌ருட‌ம் இவ்வுல‌கில் என்ன‌னென்ன‌ செய்திக‌ள் பிர‌ப‌ல‌ம், யாருக்கு என்ன‌ விருது கிடைத்த‌து, என்ன‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்த‌ன‌, அந்த‌ வ‌ருட‌த்தின் அரிய‌ க‌ண்டுபிடிப்புக‌ள், பல‌ வித‌மான‌ நிக‌ழ்வுக‌ளை அருமையாக‌ப் ப‌ட்டிய‌லிடுகிறார்க‌ள்.
இந்த இணையதளத்தில் நுழைந்த‌வுட‌ன் ந‌ம்முடைய‌ பிற‌ந்த‌ வ‌ருட‌த்தை டைப் செய்தால் உட‌னே வ‌ருட‌ங்க‌ள் பின்னோக்கி ந‌க‌ரும். நாம் பின்னோக்கி ந‌க‌ர்வ‌து போன்ற‌ ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுகிற‌து.
அடுத்து உங்க‌ள் வ‌ருட‌த்திற்கான‌ செய்திக‌ள் அருமையாக‌ ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌ந்துக் கொண்டிருக்கும். இந்த‌த் த‌ள‌ம் ச‌ற்று வித்தியாச‌மாக‌வும், ப‌ய‌னுள்ள‌தாக‌வும் உள்ளது.

Bit Box: ஒரு பாதுகாப்பான இணைய பிரவுசர்



கணணி செய்தி
Bit Box: ஒரு பாதுகாப்பான இணைய பிரவுசர்
[ திங்கட்கிழமை, 06 யூன் 2011, 08:09.35 மு.ப GMT ]
எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இணையத்தில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பொக்ஸ்(BitBox). இது பயர்பொக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும்.
இன்றைய இணைய தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பது தான் அதிகமாக உள்ளது.
இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் தான். இந்த பலவீனங்களின் வழியே கணணியில் புகுந்து கெடுதல் விளைவிக்கும் வகையில் மால்வேர்களும் வைரஸ்களும் உருவாக்கப்படுகின்றன.
இந்த பிரவுசர் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், பிரவுசரை கணணியின் ஓபரேட்டிங் சிஸ்டம் தொடர்பின்றி இயங்கும் வகையில் செய்துவிட்டால் மால்வேர்கள், கணணியில் இறங்கி கெடுதல் விளைவிக்காதல்லவா! இப்படித்தான் பிட் பொக்ஸ் இயங்குகிறது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கணணியில் இது இயங்கினாலும், விண்டோஸ் இயக்கத்திலிருந்து விடுபட்டு தானாக இது இயங்குகிறது. பிட் பொக்ஸ் இயங்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் வழங்கும் விர்ச்சுவல் பாக்ஸ் என்னும் புரோகிராமினைப் பயன்படுத்துகிறது.
இது ஒரு பாதுகாப்பான லினக்ஸ் பதிப்பின் ஒரு வகையாகும். இதன் பெயர் Debian 6 Linux. இதன் அடிப்படையில் இயங்குவதால், விண்டோஸ் இயங்கும் கணணியின் சிஸ்டம் மற்றும் கணணிக்குத் தொடர்பின்றி இணைய பிரவுசர் நடைபெறுகிறது.
“Browser in a box” என்பதன் சுருக்கமே BitBox. இது இயங்குகையில் ஒரு guest ஓபரேட்டிங் சிஸ்டத்தினை இயக்குகிறது. இதனால் பிரவுசரின் அனைத்து நடவடிக்கைகளும் அடிப்படையான ஓபரேட்டிங் சிஸ்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. கணணி பயன்படுத்துபவர், மால்வேர்களை அனுப்பும் ஓர் இணைய தளத்திற்குச் சென்றாலும், அதனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பாதிக்கப்படமாட்டாது.
இந்த இரண்டு ஓபரேட்டிங் சிஸ்டங்களும் பயன்படுத்த அவை இரண்டும் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் ஒரு போல்டர் இயங்குகிறது. இதனை ஒரு தனி யூசர் அக்கவுண்ட் மூலம் பயன்படுத்தலாம். பிட் பொக்ஸ் இயக்கப்பட்ட பின்னர் விண்டோஸ் மூலம் எந்த ஒரு கோப்பையும் பதிவேற்றம் செய்திடவோ அல்லது இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்திடவோ முடியாது. இவை தடுக்கப்படுகின்றன.
இது மட்டுமின்றி ஒவ்வொரு முறை பிட் பொக்ஸ் இயக்கப்படும் போதும் புதிய பூட் இமேஜ் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு இயங்குகிறது. இதனால் முந்தைய இணைய அனுபவத்தில் ஏதேனும் மால்வேர் இருப்பினும் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.
பிட் பொக்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் இயங்குகிறது. Debian, Ubuntu, OpenSUSE மற்றும் Gentoo போன்ற லினக்ஸ் சிஸ்டங்களிலும் இது இயங்குகிறது.

Saturday 4 June 2011

கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு


கணணி செய்தி
கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 யூன் 2011, 04:43.42 மு.ப GMT ]
உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு.
உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIPஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:
குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.
LIPஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக் செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு


MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு
[ புதன்கிழமை, 01 யூன் 2011, 04:40.43 மு.ப GMT ]
பெரும்பாலும் ஓடியோ கோப்புக்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
நம்மிடம் சில MP3 ஓடியோ கோப்புக்கள் தரம் குறைந்து இருக்கும். அந்த வகை கோப்பை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி(சற்று தொங்கலாக இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம் மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.
1. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. தற்பொழுது உங்களுக்கு வரும் Zip கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.
3. இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற கோப்பை ஓபன் செய்து கொள்ளவும்.
4. இந்த மென்பொருளை நாம் கணணியில் நிறுவச் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.
5. பின் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
7. உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 கோப்புக்கள் புதிய தரத்துடன் உருவாகும்.
8. பின் தோன்றும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும் மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.

Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு


Speed Fan: கணணியின் வெப்பநிலையை சீராக வைப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 08:11.33 மு.ப GMT ]
உங்கள் கணணி சீராக இயங்க வேண்டுமென்றால் உங்களுடைய கணணிக்கு சமச்சீரான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும்.
நீங்கள் கணணியை அதிக நேரம் பயன்படுத்தி வந்தால் உங்களுடைய கணணியில் உள்ள Hardisk, Processor மற்றும் Motherboardகள் விரைவில் வெப்பமாகிவிடும்.
இதனால் உங்களுடைய கணணியின் ஆயுட்காலமும் வெகுவாக குறைகின்றது. உதாரணமாக 5 வருடம் வரை இயங்கும் தன்மையுள்ள வன்பொருட்கள் 4 ஆண்டுகள் வரையே இயங்கும்.
இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த வெப்பத்தை குறைக்க நம் கணணியில் Processor/Motherboard Cooling Fan பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் முழு பயனை நாம் அடைவதில்லை.
Speed Fan என்கிற இந்த சிறிய இலவச மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணணியின் Temperature ஐ அறிந்து கொள்ளலாம். இதனால் உங்களுடைய கணணி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம்.
அது மட்டுமின்றி இந்த மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணணியை கையாளும் திறன் உள்ளதால் உங்களுடைய கணணியை இது கண்காணித்து உங்களுக்கு தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணணியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான ஒரு அவசிய மென்பொருள்.

உலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு


உலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு
[ சனிக்கிழமை, 04 யூன் 2011, 07:37.53 மு.ப GMT ]
சிறந்த வீடியோக்களை இனி தேடிக் கண்டுபிடித்து பார்க்க வேண்டாம். தினமும் உலக அளவில் மிகவும் பிரபலமான 12 வீடியோக்களை துறை வாரியாக நமக்கு காட்ட ஒரு தளம் உள்ளது.
சிறந்த வீடியோக்களை இனி ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம், யூடியுபில் இருந்து அனைவராலும் மிகவும் பார்க்கப்பட்ட வீடியோக்களை துறை வாரியாக பிரித்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
சிறந்த வீடியோக்கள் அனைத்தையும் துறை வாரியாக பட்டியலிட்டு நமக்கு காட்டுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. Cool Ads, Fails Funny Videos, Gaming & Tech Inspiring, Movie Trailers, Music Videos, OMG, Pets & Animals, Sports என்று அனைத்து துறைகளிலும் முதல் சிறந்த 12 வீடியோக்களை 12 பக்கங்கள் வீதம் நமக்கு காட்டுகிறது.
யூடியுப் தளத்தில் அதிக வாசகர்கள் பார்த்த வீடியோக்களை வரிசைப்படுத்தி கொடுக்கும் வேலையை இத்தளம் செய்கிறது. உதாரணமாக Movie Trailers என்பதை சொடுக்கி தற்போது வெளிவர இருக்கும் படத்தின் டிரைலரையும் எளிதாக பார்க்கலாம்.
Pets and Animals என்பதை சொடுக்கி செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவையும் பார்க்கலாம். இதைத்தவிர அன்றைய தினத்தில் யூடியுப் வாசகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 12 வீடியோக்களை இத்தளத்தின் முகப்பு பக்கத்தில் தினமும் பார்க்கலாம்.

Friday 3 June 2011

DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க


DAZ Studio 4: 3D அனிமேஷன் உருவாக்க
[ வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 04:13.37 மு.ப GMT ]
மனிதன் இந்த அளவுக்கு கற்பனை செய்யவிட்டால் கணணி உலகத்தை யாரும் அடைந்திருக்க முடியாது.
அதே போல் தான் கணணி செயல்பாட்டின் கற்பனை 2D, 3D போன்ற அனிமேஷன்கள். அந்த வகையில் தற்போதைய நிலையில் 3D பயன்பாட்டில் உள்ளது.
3D வசதியின் மூலமாக கற்பனை உலகையே படைத்து விட முடியும். அந்த அளவுக்கு 3Dயில் வசதி உள்ளது. நாம் அனைவரும் 3D படங்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கும். செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களாக இருந்தாலும் அவை மிகவும் தத்ருபமாக இருக்கும்.
இவ்வாறு உருவாக்கப்படும் திரைப்படங்கள் யாவும் 3D மென்பொருள்களின் உதவியுடன் மட்டுமே முடியும். இதுபோன்று 3D அனிமேஷன்களை உருவாக்க மாயா, 3ds Max போன்று பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. அதே போல 3Dஅனிமேஷன்களை எளிமையான முறையில் உருவாக்க DAZ Studio என்ற மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று add to cart என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் subscribe me என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக DAZ தளத்தில் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்து கொள்ள உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு லிங் அனுப்பபடும் அதை பயன்படுத்தி கணக்கை உறுதிபடுத்தி கொள்ளவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் checkout என்னும் பொத்தானை அழுத்தி உறுதிபடுத்தவும். பின் உங்களுடைய கணக்கை திறந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். லைசன்ஸ் கீயும் இந்த கணக்கிலேயே இருக்கும்.
மென்பொருளை தரவிறக்கம் செய்யும் போது இணைய இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். ஏனெனில் மென்பொருளானது 430எம்.பி அளவுடையது ஆகும்.
இந்த DAZ Studio 4 பற்றி ஓன்லைனிலேயே கற்றுதருகிறனர். அதை பயன்படுத்தி எளிமையாக இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும்.